ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக். 10 தில்லியை நோக்கிப் பேரணி! மும்பை போராட்டத்திற்குப் பின்பு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
3 Oct 2026, 9:57 pm

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக். 10 தில்லியை நோக்கிப் பேரணி!

மும்பை போராட்டத்திற்குப் பின்பு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

புதுதில்லிவாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளுக்கும், பிற தேர்தல்ஆணையர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் முழுப்பொப்பேற்றுத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்பதவி விலகவலியுறுத்தி, பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ளசிவாஜி பூங்காவில் வெள்ளிக்கிழமை ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சி.ஜே.பி) சார்பில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.பாஜக அரசின் நெருக்கடிகள் மற்றும் மும்பை காவல்துறையின் கைது மற்றும் தடைஉள்ளிட்ட நடவடிக்கைகளையும் மீறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மகாத்மா காந்தி

யின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, பழம்பெரும் பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா, நடிகைஷபானா ஆஸ்மி, பாடகர்விஷால் தத்லானிஆகியோர் பங்கேற்று ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தினர். மேலும், தடையை மீறிஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் சிவாஜி பூங்காவில் குவிந்து, மோடி அரசுக்கும் ஞானேஷ் குமாருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் சிவாஜி பூங்கா அதிர்ந்தது.

ஞானேஷுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

இந்தப் போராட்டத்தில் சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே பேசுகையில், “நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்கக் கூட்டு நடவடிக்கை அவசியம். தற்போதைய தேர்தல்முறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறுசந்தேகங்கள் உள்ளன. தேர்தல் ஆணையம் ஜனநாயகம் இயங்க வேண்டிய முறையில் செயல்படவில்லை. எனவே,குடிமக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.தொடர்ந்து, சி.ஜே.பி இணை ஒருங்கிணைப்பாளரும், தேசியச் செய்தித் தொடர்பாளருமான அசுதோஷ் ரங்கா பேசுகையில், “இந்தியக் குடிமக்களின் வாக்குகளையும் பெயர்களையும் நீக்க யாருடைய அனுமதியின் பேரில்ஞானேஷ் குமாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் எஸ்.ஐ.ஆர்உள்ளிட்ட முறைகேடுகள் செய்யப்பட்டன? என்ற கேள்விகள் பலமாகக் கிளம்பியுள்ளன. அதேபோல, கோடிக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது குறித்துவெளிப்படைத்தன்மை வேண்டும்; விளக்கம் அளிக்க வேண்டும். ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகவேண்டும்” என வலியுறுத்தினார்.

தில்லியை நோக்கி…

மும்பை போராட்டத்தைத் தொடர்ந்து, சி.ஜே.பி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், அக்டோபர் 10 அன்று நாடு முழுவதிலுமிருந்து தில்லி ஜந்தர் மந்தர் நோக்கிப் போராட்டப் பேரணியாகப் புறப்படுவோம். எங்களைத் தடுத்து நிறுத்த தில்லி காவல்துறை முயன்றால், அவர்கள் எங்களை எங்கு தடுக்கிறார்களோ அதுவே எங்களின் ஜந்தர் மந்தராகமாறும். எங்கள் போராட்டம் அமைதியான முறையில் இருக்கும். மகாத்மா காந்தி காட்டியபாதையில் நடப்போம்.நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் இந்தப் பேரணியில் இணைய வேண்டும்” என சி.ஜே.பி அழைப்பு விடுத்துள்ளது.