தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் பணியாற்றியபோது அரசுக்கு ரூ. 250 கோடி இழப்பு, தற்கொலை விவகாரத்தில் சிக்கிய ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானது எப்படி?

27 Sept 2026, 9:53 pm
கேரளத்தில் பணியாற்றியபோது அரசுக்கு ரூ. 250 கோடி இழப்பு, தற்கொலை விவகாரத்தில் சிக்கிய  ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானது எப்படி?

கேரளத்தில் பணியாற்றியபோது அரசுக்கு ரூ. 250 கோடி இழப்பு, தற்கொலை விவகாரத்தில் சிக்கிய ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானது எப்படி?

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் தாமஸ் ஐசக் கேள்வி!

திருவனந்தபுரம்கேரளத்தில் பணி யாற்றியபோது அரசுக்கு ரூ.250 கோடி இழப்பு, தற்கொலை விவகாரத்தில் சிக்கிய ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையரானது எப்படி? என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் தாமஸ் ஐசக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”1988ஆம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், வி.எஸ். அச்சுதானந்தன் (சிபிஎம்) தலைமையிலான ஆட்சிக் காலத்தில்கேரளப் பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். ‘பேட்டி - பெல்’ (PATI-Bel) நிறுவனத்துடன்தொடர்புடைய மலேசிய ஒப்பந்ததாரரான லீ பீன் சீன், 2006-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து ஞானேஷ் குமார் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டார்.

தற்கொலை வழக்கு

அக்காலகட்டச் செய்திகளின்படி, லீ எழுதிய தற்கொலைக்குறிப்பில், கேரள அரசு அதிகாரிகள் தமக்குத் தொல்லை கொடுத்ததாகவும், தனது நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைத் தராமல் தாமதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதில் ஞானேஷ் குமாரின் பெயரும் இடம்பெற்றிருந்ததால், மாநில அரசு இது குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், அவரைப் பொதுப்பணித்துறையிலிருந்தும் மாற்றியது.குறிப்பாக, ஞானேஷ் குமாரின் செயல் பாட்டால் உலக வங்கி நிதி உதவியுடன் செயல் படுத்தப்பட்ட கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தில் பல சிக்கல்கள் எழுந்தன. நிலம் கையகப்படுத்துதல், நிதியளிப்பு மற்றும் நிர்வாக முடிவுகளில் ஏற்பட்ட தாமதங்களால் இத்திட்டம் பெருமளவில் தாமதமடைந்து, இறுதியில் மாநில அரசுக்குக் கடும் நிதிச்சுமையை ஏற் படுத்தியது. அதாவது இழப்பீடாக ரூ.35 கோடியை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கு ரூ.215 கோடி மதிப்பிலான மாற்றியமைக்கப்பட்ட திட்டத் திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. இவ்வளவு நிகழ்வுகளுக்குப்பிறகும் ஞானேஷ் குமாரால் எப்படி ஒன்றிய அரசின் உயர் பொறுப்புகளுக்குச் செல்ல முடிந்தது?

அயோத்தி அறக்கட்டளையில் பங்கு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வக் குறிப்பின்படி, ஞானேஷ் குமார் அதன்பின்னர் (கேரளத்திலிருந்துஒன்றிய அரசுப் பணிக்குச் சென்ற பின்பு) பாதுகாப்புத் துறையின் இணைச் செயலாளராகவும், ஒன்றிய உள்துறைஅமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகவும்,கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2019-இல் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பை மோடி அரசு அமல்படுத்திய காலகட்டத்தில் ஞானேஷ் குமார் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றினார். ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டமுன்வடிவைத் தயாரிப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப் பைத் தொடர்ந்து, ஸ்ரீராம் அறக்கட்டளையை அமைப்பதிலும் அவர் தொடர்புடையவராக இருந்தார்.இந்தப் பொறுப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான அரசுக்கு, குறிப்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஞானேஷ் குமார் எவ்வளவு நெருக்கமானவர் என்பதற்கான சான்றுகள் ஆகும். இந்தப் பணிகளுக்காகவே 2025இல் தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டது ஒரு “பரிசு”. இருப்பினும், இந்தநியமனத்திற்குப் பின் னால் தனிநபரைத் தாண்டி ஆவணப்படுத்தப் பட்ட ஒரு அமைப்பியல் மாற்றம் உள்ளது.

அரசியல் ரீதியான பொறுப்பா?

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், பாஜக தலைமையிலான அரசு தன்னிடம் ஒப்படைத்த அரசியல் பணியையே செய்து வருகிறார். இரண்டு தேர்தல் ஆணையர்கள் குற்றச்சாட்டு தொடர்பாக ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; நாடாளுமன்றத்தில்அவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.