வெளியேறுங்கள் ஞானேஷ் குமார்! - எம்.ஏ.பேபி
8 Oct 2026, 10:29 pm

வெளியேறுங்கள் ஞானேஷ் குமார்! - எம்.ஏ.பேபி

ஒரு துடிப்பான மற்றும் முறையான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்று தேர்தல்கள் நடத்தப்படும் விதமாகும். இதில் மிகவும்அவசியமானது வெளிப்படைத்தன்மை, நடுநிலைமை மற்றும் தேர்தல் நடத்தும் அமைப்பின்பொறுப்புக்கூறலாகும். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலத்தின் சிலதனித்தன்மைகள் மற்றும் விதிவிலக்குகள் எப்படி இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் பெற்றிருக்க வேண்டியநடுநிலையான அதிகாரம் அப்போது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதுமுதல் நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. ஞானேஷ் குமார் வாக்காளர் பட்டியல்களின் ‘கொலைகாரராக’ச்செயல்பட்டு, உயிருடன் இருக்கும் உண்மையான வாக்காளர்களை நீக்கி அவற்றைச் சிதைத்து வருகிறார். பாரத ரத்னா சி.என்.ஆர். ராவ் முதல் திரைக் கலைஞர் பிரகாஷ் ராஜ் வரை பலரும் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து, அதை மீண்டும் பெறுவதற்காக பல்வேறுநிர்வாகத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது.

செப்டம்பர் 23 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’

நாளிதழில் ரித்திகா சோப்ராவின் புலனாய்வுக் கட்டுரை வெளியானது. ஞானேஷ் குமாருக்கு எதிரான சவால் இப்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே எழுந்துள்ளதுஎன்பதை இது காட்டுகிறது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர்,தங்களுக்குத் தெரியாமல் தேர்தல்ஆணையத்தின் பெயரில் வெளியிடப்பட்ட முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு எதிராகப் பத்து மாதங்களில் குறைந்தது 14 எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த எதிர்ப்புகளில் இரண்டு, அமைச்சரவைக் செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. வாக்காளராகப் பதிவு செய்வதற்கான படிவம் 6 ஜூலை மாதம் மாற்றப்பட்டது. விதிகளுக்குத் திருத்தம் செய்யப்பட வேண்டும்என்று ஜோஷி எச்சரித்திருந்த போதிலும், விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் பெயர் “கடைசி எஸ்ஐஆர் (SIR)” பட்டியலில் உள்ளதா என்றுஅதில் கேட்கப்பட்டது. இந்த மாற்றம் அனுமதியற்றது; சட்டவிரோதமானது என்று பின்னர் சாந்து பதிவு செய்தார்.

வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை மைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போக்கு அதிகரித்து வருவதாக ஜோஷி எச்சரித்தார். அதேசமயம், சட்டப்பூர்வ தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு உள்ள -அணுகலைத் தடுக்கும் - எந்தவொரு சட்டப்பூர்வ அதிகாரமும் ஆணையத்தின் ஐ.டி பிரிவு தலைவருக்கு இல்லை என்று சாந்து குறிப்பிட்டுக் காட்டினார்.மேற்கு வங்கத்தில் 38 லட்சம் மேல்முறையீடுகள் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன, அவற்றில் 16.10 லட்சம்வாக்காளர்களை நீக்குவதற்கான படிவங்கள் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தாக்கல் செய்தது யார் என்றுசாந்து கேள்வி எழுப்பினார்; ஆனால் அவருக்கோ, ஜோஷிக்கோ அல்லது மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கோ இதுவரை எந்பதிலும்அளிக்கப்படவில்லை.

மேற்கு வங்கத் தேர்தலும் வாக்காளர் நீக்கமும்

2026 ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் நிமித்தம் மேற்கு வங்கத்தில் நான் இருந்தபோது, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகப் பொறுப்பு வகித்தஅதிகாரிகளின் புகைப்படங்களைக் காண முடிந்தது;அவர்களது பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. ‘ஸ்டேட்ஸ்மேன்’ போன்ற தேசிய நாளிதழ்கள் இதைச் சுட்டிக் காட்டியிருந்தன. மேற்குவங்கத்தில், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம்வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன, இது மொத்த வாக்காளர்களில் தோராயமாக 12 சதவீதமாகும். இதில் “தர்க்கரீதியானமுரண்பாடு” (logical discrepancy) என்ற பிரிவின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு 27.16 லட்சம் பெயர்கள் தகுதியற்றவைஎன அறிவிக்கப்பட்டன. மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது கிட்டத்தட்ட 99 சதவீத மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்தன.

முடிவுகளின் பகுப்பாய்வில், தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு செய்யப்பட்ட நீக்கங்கள் மட்டுமே வெற்றி வித்தி

யாசத்தை விட அதிகமாக இருந்த 49 தொகுதிகள் கண்டறியப்பட்டன. இதில் பாஜக 26 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 21 இடங்களையும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும் வென்றன. ஆனால் 2021 ஆம் ஆண்டில் இந்த 49 தொகுதிகளில் திரிணாமுல் 21 இடங்களைக் கொண்டிருந்தது. ரஜார்ஹட் நியூ டவுன் தொகுதியில் வெற்றி வித்தியாசம் வெறும் 316 வாக்குகளாக இருந்தது; இங்கு தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,132 ஆகும். சட்காச்சியாவில் இந்த வித்தியாசம் 401 ஆக

இருக்க, நீக்கப்பட்டவர்களோ 26,000 பேருக்கு மேல் ஆகும். அனைத்து வகையான நீக்கங்களையும் கணக்கிட்ட பகுப்பாய்வுகள், மொத்தமுள்ள 294 தொகு

திகளில் பாதிக்கும் மேலான தொகுதிகளில் நீக்கங்கள்வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தன. தீர்மானிக்கும் வித்தியாசத்தை விட நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது எந்த ஒரு ஜனநாயகமும் நிம்மதியாக இருக்கமுடியாது.

மோடி ஆட்சியின் கீழ், சில விதிவிலக்குகளைத் தவிர சுயேச்சையான மற்றும் புலனாய்வு ஊடகங்கள் ஓரளவுஇறந்துவிட்டன என்ற கருத்து நிலவியது. இந்தியாவில் புலனாய்வு இதழியல் இன்னும் உயிர்ப்புடன் துடிக்கிறதுஎன்பதை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிரூபித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸின்வெளிப்பாட்டிற்குப் பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தெளிவுபடுத்தல், எழுப்பப்பட்ட உண்மையான பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவில்லை. அதில் ஒன்று கூட்டத்திற்கு முன்பாக நிகழ்ச்சி நிரலைச் சுற்றுக்கு விடுவதுமற்றும் கூட்டத்திற்குப் பிறகு அதன் குறிப்புகள் சுற்றுக்கு விடப்படுவது பற்றியதாகும். பெரியதோ சிறியதோ எந்தவொரு அமைப்பாலும் பின்பற்றப்படும் இது போன்ற அடிப்படை விஷயம் கூட தேர்தல் ஆணையத்தால் இதுவரை பின்பற்றப்படவில்லை என்பது பலருக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்.

தேர்தல் ஆணையர் நியமனமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்

தற்போது பல வெற்று வினாக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சேஷன் வரை இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர்களும், அரசு சேஷனுக்குப் பிறகு வந்ததேர்தல் ஆணையர்களும் அரசு நிர்வாகத்தால் தான் நியமிக்கப்பட்டனர் என்பது அத்தகைய ஒரு கேள்வியாகும். 1950 இல் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து அவர்களின் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டத்தையும் இயற்றத்தவறிய தொடர்ச்சியான ஒன்றிய அரசுகளின் தோல்வியே இதற்குக் காரணம். நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றும் வரை தேர்தல் ஆணையர்களை நியமிக்க இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 அதிகாரம் அளிக்கிறது. ஜனவரி 2015 இல், தேர்தல் ஆணையஉறுப்பினர்களை நியமிக்கும் முறையை எதிர்த்து அனூப் பரன்வால் என்பார், ஒரு பொதுநல வழக்கைத்தாக்கல் செய்தார். நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தவறான பயன்பாட்டிற்கு எந்தஆதாரமும் இல்லாததால் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று ஒன்றிய அரசு தனது பதிலில் கூறியது.

இந்தப் பின்னணியில்தான், மார்ச் 2, 2023 அன்றுஅமர்வு ஒரு மனதாகத் தீர்ப்பளித்தது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, தலைமைத் தேர்தல்ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பிரதமர்,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியாவின் தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையரை தன்னிச்சையாக நீக்க முடியாது என்று அளிக்கப்பட்டுள்ள அதே பாதுகாப்பைத் தேர்தல் ஆணையர்களுக்கும் வழங்குமாறு உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியது. பிரதமர்நாட்டின் உச்சபட்ச நிர்வாகப் பதவியாக இருப்பதால்,தேர்தல் ஆணையரின் நியமனம் குறித்த முடிவெடுப்பதில் அவர் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு பற்றி விளக்கத் தேவையில்லை. நாட்டின் தேர்தல் செயல்முறையின் நடுநிலைமையை உறுதி செய்வதற்கான நபரைத்தேர்ந்தெடுப்பதில் கருத்து வேறுபாடு இருக்கும்போது, நாட்டின் அரசியல் நடுநிலைத் தலைமை நீதிபதியின் இருப்பு ஒருமித்த கருத்தை உருவாக்க உதவியிருக்கும்.

ஆனால், நரேந்திர மோடி அரசு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் வழிகாட்டுதலைக் காற்றில் பறக்கவிடுவது என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தது. புத்திசாலித்தனமான, சட்டப்பூர்வமான மற்றும் வெளிப்படையான ஆலோசனைகளுக்குச் சட்ட வடிவம் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் அவசரச் சட்டத்தையும் பின்னர் தலைமைத்தேர்தல் ஆணையர் நியமனத்தை அரசியல் ரீதியாகச் சாய்மானம் கொண்ட நடைமுறையாக மாற்றும் மசோதாவையும் கொண்டு வந்தனர். இதன் விளைவாக, அரசு நிர்வாகத்தின் பிரதிநிதித்துவம்மூன்றில் இரண்டு பங்காக மாறியதுடன் எதிர்க்கட்சித் தலைவர் வெறும் பார்வையாளரானார்.

ஞானேஷ் குமாருக்கு எதிரான பரந்த மக்கள் இயக்கம்

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை நிராகரிப்பதில் மோடி அரசின் நோக்கம் ஞானேஷ் குமாரின் நடத்தையிலிருந்து தெளிவாகிறது. பாசிச ஆர்.எஸ்.எஸ்அமைப்பால் கட்டுப்படுத்தப்படும் பாஜகவின் கட்டளைகளுக்கு ஏற்ப நடக்கும் பொம்மையாக அவர் செயல்பட்டுவருவதே இதற்குக் காரணம். இந்தியன் எக்ஸ்பிரஸின் புலனாய்வு கட்டுரைக்குப் பிறகு, அவருக்குச் சிறிதளவேனும் சுயமரியாதை இருந்திருந்தால்அவர் உடனடியாகப் பதவி விலகியிருக்க வேண்டும். ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில்ஒட்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவரது கண்ணியம் கேள்விக்குள்ளாகி வருகிறது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி அல்லாத அனைத்து

அரசியல் கட்சிகளும் தங்களுக்கு இடையிலான எத்தகைய வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல், ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வதற்கும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும், எஸ்ஐஆர் செயல்முறையைநிறுத்துவதற்கும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தகுதியான அனைத்து பெயர்களையும் உடனடியாகமீட்டெடுப்பதற்கும், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு பரிந்துரைத்த வழிகாட்டுதலின்படி தலைமைத்தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வெளிப்படையானசெயல்முறையை ஏற்படுத்துவதற்கும் கைகோர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பரந்த இயக்கமாக இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடிமைச் சமூகம், பொது அறிவுஜீவிகள், கலை

ஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலாச்சார ஆளுமைகள் அனைவரும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது அணுகுமுறையாகும். இது ஐந்து இடதுசாரி கட்சிகளான சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்எல்) லிபரேஷன், பார்வர்டுபிளாக் மற்றும் ஆர்எஸ்பி ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 29 அன்று இந்த பரந்தஒன்றிணைவின் ஒரு சிறு பகுதியைக் கண்டோம். நமது அரசியலமைப்பு விழுமியங்களும் இந்தியாவின் கருத்தியலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற ‘இந்தியா’ அணியின் கூட்டமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியா அணியின் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டபடி, நாட்டின் அனைத்துமாவட்டங்களிலும் கூட்டுப் போராட்டங்கள் நடத்தப்படும். புதிய இந்தியாவின் அரசியல் பரிணாம வளர்ச்சியில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமையும்.பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக்டோபர் 04, 2026 தமிழில் : எஸ்பிஆர்