ஐஐடிஇஏ தலைவராக ஞானேஷ் குமார்
27 Nov 2025, 3:11 pm
<p>இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமார், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தின் (ஐஐடிஇஏ) 2026இன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. ஐஐடிஇஏ நிறுவனம் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்காவும் ஜப்பானும் பார்வை யாளர் நாடுகளாக உள்ள இந்த ஐஐடி இஏ அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து நாடு, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் இந்த பொறுப்பை ஏற்கிறார். இதன் தலை வராக, ஞானேஷ் குமார் 2026 வரை அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார் என்பது குறிப்பி டத்தக்கது.</p>
