12 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கெடு!
4 Jul 2026, 9:26 pm
<p><strong>12 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கெடு!</strong></p><p>சென்னை, ஜூலை 4 - முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோ ருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை, 12 வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்ற தாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், தமிழக முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதி ராக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்ற விசாரணையில் உள்ளது. விசாரணை அதிகாரி யிடம் வாக்குமூலம் அளிக்கா தவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப் பட்டுள்ளதால், அவர்களை சி.பி.ஐ. தரப்பு சாட்சிகள் பட்டி யலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல் களை வழங்க உத்தரவிட வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந் தது. இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய் ததை எதிர்த்து, ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக் கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, சனிக்கிழமை (ஜூலை 4) அன்று விசா ரணைக்கு வந்தது. அப் போது, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலை யில், சில சாட்சிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப் படவில்லை. பதிவு செய்யப் பட்ட சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மனுதாரருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம், முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், குட்கா முறை கேடு வழக்கை 12 வாரங்களுக் குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
