தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

6 Mar 2026, 2:41 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு அவையில் ஒற்றுமையின்மை: குட்டரெஸ் கவலை

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் ஒற்றுமை இல்லாதது குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கவலை கொண்டுள்ளார்.  அவருடைய செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசிய போது இதனை குறிப்பிட்டார். பாதுகாப்புக் கவுன்சிலில் நிலவும் ஒற்றுமையின்மை குறித்து நாங்கள் சில காலமாகவே கவலை கொண்டுள்ளோம். உலக அமைதியையும் பாதுகாப்பையும் பராமரிப்பதில் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு முதன்மையான பொறுப்பு உள்ளது. அந்த இலக்கை அடைய உறுப்பினர்கள் பொதுவான உடன்பாடுகளைக் காண வேண்டும் என்று நாங்கள் ஊக்குவித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா போர் சமரசம் செய்ய தயார் : ரஷ்யா

ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேவைப்பட்டால் மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வியன்னாவிலுள்ள சர்வதேச அமைப்பு களுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி மிகைல் உல்யனோவ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், இரு தரப்பின் முக்கிய நோக்கங்களையும் ராணுவ பலத்தின் மூலம் அடைய முடியாது. அமெரிக்கா உண்மையில் இந்த விவகா ரத்தை மிக மோசமாகக் கையாண்டு வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

காங்கோ சுரங்க விபத்து : 200-க்கும் மேற்பட்டோர் பலி

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் இடிபாடுகளில் சிக்கி  70 சிறுவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிவு (North Kivu) மாகாணத்தில் உள்ள ருபாயா (Rubaya) சுரங்கப்பகுதிகளில் அதிக கனமழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் தொழில்நுட்ப உலகிற்கு தேவையான மிக முக்கிய மான  ‘கோல்ட்டன்’ (Coltan) தாதுச் சுரங்கம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம், இதே ருபாயா பகுதியில் உள்ள சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்தில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ரஷ்யாவுடனான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க உள்ளதாக உக்ரைன் தெரி வித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உக்ரைன்-அமெரிக்கா-ரஷ்யா இடையிலான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை  மார்ச் 5 முதல் 9 வரையிலான காலப்பகுதியில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மேற்காசிய பகுதிகளில்  மற்றொரு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை மற்றும் அதன் இடத்தை மாற்றுவது குறித்து அமெரிக்காவுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ராணுவப் பங்கேற்பை நிராகரிக்க முடியாது - கனடா பிரதமர்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் போர்  தீவிரமடைந்து வரும் நிலையில் ராணுவ ரீதியாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தப் போரில் கனடா ஈடுபடுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு தெரிவித்தார். அதே நேரத்தில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேசச் சட்டத்திற்கு முரணானவை. இது சர்வதேச ஒழுங்கு தோல்வியடைந்ததற்கான மற்றொரு உதாரணம்   என்றும்  கார்னி குறிப்பிட்டார்.

நேட்டோ கூட்டமைப்பில் இருந்து ஐரோப்பா வெளியேற வேண்டும் இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு

பிரஸ்ஸல்ஸ்,மார்ச் 6- அமெரிக்கா தலைமையிலான நேட் டோ ராணுவக் கூட்டமைப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளியேற வேண் டும் என அந்நாடுகளில் செயல்படும் இடதுசாரிக் கட்சிகள் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன.  சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேட்டோ கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண் டும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அழிவைத் தான் கொடுக்கும் என ஐரோப்பிய நாடு களை சேர்ந்த இடதுசாரிக் கட்சிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளன.  குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் உலகளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை யை உச்சத்திற்கு கொண்டு செல்லும், இது உலகம் முழுவதும் உள்ள சாதாரண ஏழை எளிய உழைக்கும் வர்க்க மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று தொழிற் சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலேயே பல மான எதிர்ப்பு எழுந்து வருகிறது.  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போ டெங்கா (Marc Botenga) சமீபத்தில் பேசிய போது மேற்குலக நாடுகளின் ராணுவத் தலையீடுகள் அழிவைத்தான் தந்துள்ள னவே தவிர, ஜனநாயகத்தை கொடுத்த தில்லை. டிரம்ப்பும் போர்க் குற்றவாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகுவும் ஈரானியர்களின் உயிரைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று சொன்னால் யார் தான் அதை நம்புவார் கள்? என்றும் கடுமையாக விமர்சித்தி ருந்தார். சில ஐரோப்பிய ஒன்றிய தலைவர்க ளும்  அதிகாரிகளும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்தே பேசி வருகின்றனர். இந்த போரை கவனிப்பதாகவும், ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் பரிசீலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.   ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மோச மான நிலைபாடை இடதுசாரி நாடாளு மன்ற உறுப்பினர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ஸ்பெயின் நாட்டின் ‘போடெமோஸ்’ (Podemos) கட்சியைச் சேர்ந்த ஐரீன் மான்டெரோ மற்றும் இசபெல் செர்ரா ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் அணுசக்தி நாடுகளான அமெ ரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் இந்தத் தாக்குதல், ஐ.நா சாசனம் மற்றும் ஈரா னின் இறையாண்மைக்கு எதிரான ஒரு போர்க் குற்றம்.  கியூபா மீது பொருளாதா ரத் தடை விதித்து மக்களைப் பட்டினி யில் தள்ளுவது, காசாவில் இனப்படு கொலையைத் தொடர்ந்து நடத்துவது, கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டி வருவது போன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதையும் அவர் கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக எந்த சட்டத்துக்கும் கட்டுப் படமாட்டேன் என  அடாவடித்தனத்தில் ஈடு பட்டு வரும் டிரம்ப்பை கட்டுப்படுத்த அமெ ரிக்க நிர்வாகத்துடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். அந்நாடு தலைமை யிலான நேட்டோ ராணுவக் கூட்டணியிலி ருந்து வெளியேற வேண்டும் என அக்கடி தத்தில் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.  இதேபோன்ற கோரிக்கைகளை கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் அனைத்து தொழிலாளர் போராட்ட முன்னணி (PAME) ஆகியவையும் எழுப்பியுள்ளன. கிரேக்க மண்ணில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்கா ஏற்கெனவே ஆப்கானிஸ் தான், இராக், லிபியாவைத் தாக்கி அழித் துள்ளது. இந்த நாடுகளில் எங்குமே தாக்குதல்கள் ஜனநாயகத்தையோ மனித உரிமைகளையோ கொண்டு வரவில்லை என்று பெல்ஜியம் தொழிலா ளர் கட்சி மிகக்கடுமையாக கண்டித் துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.