தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘குருகிராம் வெள்ளப்பெருக்கு பாஜக அரசின் பன்முகத் தோல்வியைக் காட்டுகிறது’

2 Sept 2026, 8:45 pm
‘குருகிராம் வெள்ளப்பெருக்கு பாஜக அரசின் பன்முகத் தோல்வியைக் காட்டுகிறது’

‘குருகிராம் வெள்ளப்பெருக்கு பாஜக அரசின் பன்முகத் தோல்வியைக் காட்டுகிறது’

குருகிராம்ஆகஸ்ட் 26 அன்று, தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையின் இஃப்கோ சௌக் (Ifco Chowk) சாலையில் திடீரென 15 அடிஆழமும் 10 அடி அகலமும் கொண்ட ராட்சதப் பள்ளம் (Sinkhole) உருவானது. அப்பள்ளத்தில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற 3 நாட்களும், சேதமடைந்த குழாய்களை மாற்றும் பணிகளுக்குச் சுமார் 15 நாட்களும்தேவைப்படும் எனமாநகர வளர்ச்சி முகமை அதிகாரிகூறியுள்ளார்.

ஹரியானாவின் ‘மில்லினியம் சிட்டி’ என்று அழைக்கப்படும் குருகிராம் நகரம் தான் அம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் (GDP) 60% பங்களிப்பை வழங்குகிறது. ஆனால்ஆண்டுதோறும் ஏற்படும்வெள்ளப்பெருக்கும், சாலைகள் உடைப்பும் அந்நகரின் பல்வேறுதுறைகளின் ஒட்டுமொத்தத் தோல்வியையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

திட்டமிட்ட நகரமயமாக்கல் இல்லாதது, இயற்கை நீர்நிலைகள் அழிப்பு, அரசு முகமைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்்பின்மை ஆகியவற்றின் காரணமாகவே குருகிராம் நகர்ப்புற பேரழிவைச் சந்தித்து வருவதாக ‘தி வயர்’ (The Wire) ஊடகத்தில் அண்டரா பரூவா ஒருவிரிவான ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.1976-ஆம் ஆண்டு இந்திய சர்வே அமைப்பின் (Survey of ndia) பதிவுகளின்படி, குருகிராமில் 519 நீர்நிலைகள் இருந்தன.

ஆனால், நகரத்தின் விரைவான ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற திட்டமிடாத நகரமயமாக்கல் காரணமாக 2018-ஆம் ஆண்டு நீர்நிலைகளின் எண்ணிக்கை வெறும் 251 ஆகச்சுருங்கியுள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான தடுப்பணைகளும் (check-dams), மழைநீரை உறிஞ்சும் ‘ஸ்பாஞ்சுகளாக’ செயல்பட்ட இயற்கையான குளங்களும் கட்டுப்பாடற்ற நகர் மயமாக்களால்அழிந்துள்ளன. குருகிராமில் நிலத்தடி மழைநீர் வடிகால் அமைப்புகள் இல்லாததால், மழைநீர் ஊடுருவ வழியின்றி ாலைகளிலேயே வெள்ளமாக ஓடுகிறது. “நீர் உணர்திறன் கொண்ட நகர்ப்புற வடிவமைப்பை” குருகிராம் பின்பற்றத் தவறிவிட்டது எனஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) நிலையான வாழ்விட திட்ட மேலாளர் மிடாஷி சிங் கூறியுள்ளார். அரசு முகமைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலையும், அதிகார மோதல்களுமே இப்பிரச்சனைகள் சரிசெய்யப்படாமல் தொடர்வதற்கு பிரதான காரணம் என்று 2020-2021 காலத்தில் குருகிராம் பெருநகர வளர்ச்சிக் குழுமதலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வி.எஸ். குண்டு குறிப்பிட்டுள்ளார்.

பொது நலன் என்ற எண்ணமே இல்லாமல், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தும் கட்டுமானங்களுக்காக இயற்கையான நீர்வழிகள், காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவையே குருகிராம்நகரம் அனுபவித்து வருகிறது.

லாபம் பார்த்த பெருமுதலாளிகளும் பாஜக தலைவர்களும் ஊழல் வாதிகளும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொண்டார்கள். மக்கள் நலன் சார்ந்த திட்டமிடல் இன்றி கார்ப்பரேட்டுகளின் லாபத்தை மட்டுமேநோக்கமாகக் கொண்ட நகரமயமாக்கல் நடவடிக்கைகளால் குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும் வாழ்ந்து கொண்டு கூலி வேலைக்குசெல்லும் குடும்பங்களே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.