விளையாட்டு
24 May 2026, 9:19 pm

100 மீ - 10.09 வினாடி இந்தியாவின் அதிவேக மனிதர் குரிந்தர்வீர் சிங்

29ஆவது தேசிய சீனியர் தடகள கூட்டமைப்பு தொடர் (பெடரேஷன் கோப்பை) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் 100 மீ ஓட்டப் பந்தயத்தில் பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற 100 மீட்டர் ஆடவர் பிரி வின் இறுதி சுற்றில், பந்தய தூரத்தை வெறும் 10.09 வினாடிகளில் கடந்தார் குரிந்தர்வீர் சிங். இதன்மூலம் மிக குறைந்த நேரத்தில் 100 மீ தூரத்தை கடந்த முதல் இந்தியர் என்ற சாத னையை இந்திய கடற்படையில் பணி யாற்றி வரும் குரிந்தர்வீர் சிங் படைத்துள்ளார். மேலும் சாதனை மூலம் இந்தியாவின் அதிவேக மனித ராகவும் அவர் உருவெடுத்துள்ளார். இதன்மூலம் குரிந்தர்வீர் சிங் காமன் வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். சாதனை - சோகம் - விஷால் அதே போல சனியன்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 44.98 வினாடிகளில் கடந்து 45 வினாடி களுக்குள் பந்தய தூரத்தை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை யைப் படைத்துள்ளார் விஷால். ஆனாலும், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி களுக்கு தகுதிபெறும் வாய்ப்பை 0.02 வினாடிகளில் தவறவிட்டார்.

நார்வே செஸ் இன்று தொடக்கம்

நார்வே நாட்டின் ஓஸ்லோ ப்ஜோர்ட் நீர்முனையை நோக்கியவாறு, நோபல் அமைதி மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டீச்மேன் பிஜோ ர்விகா’ பொது நூலக கட்டிடத்தில் நார்வே செஸ் தொடர் திங்களன்று தொடங்குகிறது. இந்த தொடரில் ஓபன், மகளிர் பிரிவுகள் என இரண்டிலும் உலகின் மிகச்சிறந்த 6 வீரர்கள் களமிறங்கி யுள்ளனர். இந்தியா சார்பில் நான்கு பேர் பங்கேற்கின்றனர். ஓபன் பிரிவில் குகேஷ், பிரக்ஞானந்தா, மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் களத்தில் உள்ளனர். நார்வே செஸ் தொடரில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா ஆறு வீரர்கள் வீதம் 10 சுற்றுகளில் போட்டியிடு கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை (ஒரு முறை வெள்ளை காய்களுடனும், ஒரு முறை கருப்பு காய்களுடனும்) மோத வேண்டும். ஒவ்வொரு போட்டி யிலும் கட்டாயம் ஒரு தீர்வு (முடிவு) எட்டப்பட வேண்டும் என்பது இத்தொட ரின் தனித்துவமான புள்ளி விவர முறையாகும். 1. கிளாசிக்கல் போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் வழங்கப்படும், தோல்வி அடைந்தால் புள்ளிகள் இல்லை. 2. கிளாசிக்கல் போட்டி டிராவில் முடிந்தால், வீரர்கள் ‘அர்மகெதோன்’ டை-பிரேக்கிற்குச் செல்வார்கள்; அதில் வெற்றி பெறுபவருக்கு 1.5 புள்ளிகள் வழங்கப்படும்.