கும்மிடிப்பூண்டியில் யோகாவில் மாணவர்கள் உலக சாதனை
21 Jun 2026, 1:27 am
<p><strong>கும்மிடிப்பூண்டியில் யோகாவில் மாணவர்கள் உலக சாதனை</strong> </p><p>திருவள்ளூர், ஜூன் 20- கும்மிடிப்பூண்டி ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 400 மாணவர்கள் பங்கேற்ற யோகாசன உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் செயலர் டாக்டர் ஞானதீபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 400 மாணவர்கள் ‘அதோமுக சுகாசனம்’ எனும் ஆசனத்தில் தொடர்ந்து 400 விநாடிகள் அமர்ந்து, ஒட்டுமொத்தமாக ‘புஜங்காசனம்’ உருவத்தை அமைத்துப் புதிய சாதனை படைத்தனர். இவர்களது இந்த முயற்சி ‘நோபல் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழைச் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நோபல் உலக சாதனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லஷ்மிநாராயணன் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். மேலும், சாதனை படைத்த மாணவர்களுக்குப் பள்ளி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் யோகாசன கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில், பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வர் டாக்டர் திருஞானம், தாளாளர் தேன்மொழி திருஞானம், ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மைய நிறுவனர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p>
