கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்து விபத்து பிகார் மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்
yesterday
<p><strong>கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்து விபத்து பிகார் மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 14 – திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான இரும்பு மற்றும் காப்பர் உருக்கு ஆலைகள் செயல்பட்டு வரு கின்றன. இங்குள்ள தனியார் காப்பர் உருக்கு ஆலையில், அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதி கலன், அதிக வெப்பம் காரணமாக திடீரென வெடித்துச் சிதறியது. இந்த அதிர்வில் சுமார் 20 மீட்டர் நீளத்திற்குத் தொழிற்சாலையின் மேற்கூரை உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில், இரவுப் பணி யில் இருந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவி ரஞ்சன் (26) என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அவருடன் பணியில் இருந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 10 தொழிலா ளர்கள், கொதிகலனில் இருந்து சிதறிய இரும்புக்குழம்பு பட்டுப் படுகாய மடைந்தனர். மீட்புப் பணிகள் தகவலறிந்து வந்த கும்மிடிப் பூண்டி சிப்காட் தீயணைப்புத் துறையினர், தீப்பிழம்புகளை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். காயமடைந்த 10 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல்சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பா க்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ரவி ரஞ்சனின் உடல் மீட்கப்பட்டு, உடற் கூராய்வுக்காகப் பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. மாநில அமைச்சர் குமார், கும்மிடிப் பூண்டி வெங்கடேஸ்வரா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களைச் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சிறந்த சிகிச்சை அளிக்கப் பட வேண்டும் என மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, கும்மிடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் ப.அப்துல் ராசிக், திரவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரியாராஜ், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
