கும்மிடிப்பூண்டி: ஒரு வாரத்தில் பட்டா வழங்க கோட்டாட்சியர் உறுதி
5 Jun 2026, 11:38 pm
<p><strong>கும்மிடிப்பூண்டி: ஒரு வாரத்தில் பட்டா வழங்க கோட்டாட்சியர் உறுதி</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 5- பெத்திக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த மூன்று கிராம மக்களுக்கு அடுத்த ஒரு வாரத்தில் குடிமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து, சீர்வரிசையுடன் நடத்தவிருந்த மனு கொடுக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக் குப்பம் ஊராட்சி சாமிரெட்டிகண்டிகையில் 3 தலைமுறையாக வசிக்கும் 45 குடும்பங்க ளில், 32 குடும்பங்களுக்கு 2006ல் வழங்கப்பட்ட பட்டாக்கள் கணினி யில் பதிவேற்றப்படாமலும், 15 குடும்பங்க ளுக்குப் பட்டா விடுபட்டும் இருந்தது. அதே போல், எம்ஜிஆர் நகரில் 16 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கும், ஏகவல்லியம்மன் நகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 8 குடும்பங்களுக்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மேளதாளம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் வந்து வெள்ளி யன்று (ஜூன் 5) நூதன மனு கொடுக்கும் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் அப்துல் ராசிக், கும்மிடிப் பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகி யோர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாமிரெட்டிகண்டிகை குடியிருப்பு வரைபடத்தைத் திருத்தி கணினி பட்டா வழங்கவும், விடுபட்ட 15 குடும்பங்களுக்கும், எம்ஜிஆர் நகர் மற்றும் ஏகவல்லியம்மன் நகர் மக்களுக்கும் அடுத்த ஒரு வாரத்தில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் விதொச வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ப.லோகநாதன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.</p>
