தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கும்மிடிப்பூண்டியில்: எத்தனால் ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்!

28 Apr 2026, 11:56 am
கும்மிடிப்பூண்டியில்: எத்தனால் ஆலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்!
<p>கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் எத்தனால் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று காலை இந்த ஆலையில் உள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாகத் தொட்டிக்குள் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.</p><p>இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய் மாலி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த மேலும் 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மற்றும் விபத்துக்கான சரியான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.