கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் வேட்பு மனு தாக்கல்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் வேட்பு மனு தாக்கல்</strong></p>
<p>திருவள்ளூர், ஏப்.2- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்த ராஜன் வியாழனன்று (ஏப் 2), வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கூட்டணி கட்சி களின் தலைவர்கள் விசிக மாவட்ட செயலாளர் நேசக்குமார், தேமுதிக மாவட்ட செயலாளர் டில்லி, திமுக நிர்வாகி கள் சி.எச்.சேகர், திமுக மாவட்ட செய லாளர் ரமேஷ்ராஜ், ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் காவல்துறையினர் திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உடன் நான்கு நபர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். கூட்டணி கட்சியினர் தங்களின் கொடிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.</p>
