தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கும்மிடிப்பூண்டி பாலொயல் வன்கொடுமைக் கொலை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்!

15 Jun 2026, 5:04 pm
கும்மிடிப்பூண்டி பாலொயல் வன்கொடுமைக் கொலை - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் விரைவாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சி!

குற்றவாளிகளுக்கு விரைவான விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்! பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களை உலுக்கியுள்ளது.

பச்சிளம் குழந்தை மீதான இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விளையாட வேண்டிய வயதில், உலகம் என்றால் என்னவென்று கூட அறியாத ஒரு குழந்தை இத்தகைய கொடூர வன்முறைக்கு பலியாகியுள்ளது என்பது நாகரிக சமூகத்தின் தலைகுனிவாகும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூகம் மற்றும் அரசின் முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கோவை, திருவண்ணாமலை, நாமக்கல், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது 3 வயது குழந்தையே பாலியல் வன்கொடுமைக்கு பலியாகியிருப்பது தமிழகத்தில் குழந்தைகள் மீதான மோசமான குற்றங்களின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன பதில் கூறப்போகிறது?

குற்றங்கள் நடந்த பிறகு கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும்.

இவ்வழக்கில் விரைவான, மற்றும் துரித விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது தண்டனையை உறுதி செய்ய வேண்டும். போக்சோ நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், உளவியல் ஆலோசனை மற்றும் அனைத்து வகையான அரசு உதவிகளையும் வழங்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கிராமங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.