100 நாள் வேலை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விதொச உள்ளிருப்பு போராட்டம்
23 Sept 2026, 1:09 am

100 நாள் வேலை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விதொச உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர், செப். 22 -திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த அப்பாவரம் கிரா மத்தில் 200-க்கும் மேற்பட்ட வேலை அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு புதிய திட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து 100 நாள் வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்பாவரம் கிராமத்தில் உள்ள அனை வருக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இரண்டு முறை மனு அளித்தும் வேலை வழங்கப்படாததால், கிராம மக்கள் வருவாயின்றித் தவித்து வந்தனர். இந்நிலையில், ஆவேசமடைந்த அப்பாவரம் கிராம மக்கள் கும்மிடிப் பூண்டி பி.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் உள்ளி ருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ. அலுவலக மேலாளர் வரும் வியாழ

னன்று வேலை வழங்கப்படும் என உறுதி யளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வட்டச் செயலாளர் ப.லோகநாதன், துணை நிர்வாகிகள் ஜோதி, மனோகரன், வசந்த் பௌத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.