கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு!
15 Jun 2026, 10:36 am

கும்மிடிப்பூண்டி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நேற்று இரவு மூன்று வயது குழந்தை உடலில் மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்ல்கி மருத்துவமனியில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சோதித்ததில் 3 வயது குழந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென இரவு முழுவதும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தில் பீகாரை சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.