முந்தய பக்கம்

நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை

18 Jun 2026, 9:06 pm
நீட் மறுதேர்வுக்கு  தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை

நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை

குஜராத் மாநிலம் அகமதா பாத்தின் நியூ ராணிப் பகு தியைச் சேர்ந்தவர் காஹன் படேல். வயது 17. இவர் நீட் மறு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில், வியாழனன்று அதி காலை அரிஸ்டோ ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பின் 6ஆவது மாடியில் இருந்து விழுந்து காஹன் படேல் தற் கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக சபர்மதி காவல் ஆய்வாளர் யுவராஜ்சிங் வகேலா கூறுகையில், “இந்தச் சம்பவம் அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அதிகாலை 4:30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. மாணவர் மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது உட்பட, இதற்கான காரணத்தை தற்போது உறுதிப்படுத்த முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

எனினும் நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் இருந்து காஹன் படேலின் போக்கில் மாற்றம் தெரிந்ததாக அண்டை வீட்டினர் கூறியுள்ளனர். மோடி அரசின் அலட்சியத்தால் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள சூழலில்,ராஜஸ்தான், உத்தரகண்ட், தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத்திலும் நீட் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவ தும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram