தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78% பழங்குடி பெண்களுக்கு பாதிப்பு

28 Dec 2025, 3:19 pm
ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78% பழங்குடி பெண்களுக்கு பாதிப்பு
<p><strong>ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் &lsquo;குஜராத் மாடல்&rsquo; 3.21 லட்சம் குழந்தைகள், 78% பழங்குடி பெண்களுக்கு பாதிப்பு</strong></p> <p>காந்திநகர் மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் குஜ ராத் மாடல் என்ற பெயரில் பல் &nbsp;வேறு கட்டுக்கதைகளை அள்ளி விட்டு பிரதமர் பதவியில் அமர்ந் தார். ஆனால் அவர் பிரதமர் ஆன &nbsp;பின்பு தான் &ldquo;குஜராத் மாடல்&rdquo; என் &nbsp;பது ஒன்றுக்கும் உதவாத &ldquo;திவால் &nbsp;நிலை மாடல்&rdquo; என்று தெரியவந்தது. இந்நிலையில், தற்போது குஜ ராத் மாடல் தீவிர ஊட்டச்சத்து குறை பாட்டில் சிக்கி தவித்து வருவது அம்பலமாகியுள்ளது. குஜராத் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய &nbsp;தரவுகள், அம்மாநிலத்தில் குழந் &nbsp;தைகளும் தாய்மார்களும் கடுமை யான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதில், 56 வயதிற்குட்பட்ட 3.21 &nbsp;லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து &nbsp;குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதனால் குழந்தைகளின் உடல் &nbsp;மற்றும் அறிவுசார் வளர்ச்சி கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல பழங்குடியினப் பகுதிகளில் 15 முதல் 49 வயதுடைய &nbsp;பெண்களில் 78% பேர் ரத்தசோகை யினால் (Anaemia) பாதிக்கப்பட் டுள்ளனர் என தகவல் வெளியாகி யுள்ளன. பொய் பிரச்சாரங்கள் ஜனனி சுரக்ஷா யோஜனா, கஸ் &nbsp;தூர்பா போஷன், பிரதான் மந்திரி மாத்ரு சுரக்ஷா அபியான், பிரதான் மந்திரி மாத்ருவந்தனா யோஜனா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குஜராத் அபியான் உள் &nbsp;ளிட்ட டஜன் கணக்கான (12க்கும் &nbsp;மேற்ப்பட்ட திட்டங்கள்) ஊட்டச் சத்து மற்றும் தாய்வழி நலத் திட் &nbsp;டங்களை குஜராத் பாஜக செயல் &nbsp;படுத்துக்கிறது. இந்த திட்டங்க ளுக்கு கோடிக் கணக்கில் பணம் &nbsp;ஒதுக்கப்படுகிறது. ஆனால் திட்டங் &nbsp;கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. குறிப்பாக கிராமங்கள், பழங்குடிப் &nbsp;பகுதிகளில் ஊட்டசத்துப் பொருட் &nbsp;கள் விநியோகம் புறக்கணிக்கப்பட் டுள்ளன. இதனால் தான் ஊட்டச் சத்து குறைபாட்டில் குஜராத் மாநி லம் தவிக்கிறது. ஊழல் திட்டங்களுக்கு தொடர்ச்சி யான நிதியுதவி இருந்த போதி லும் ஊட்டச்சத்து குறைபாடு ஏன் &nbsp;அதிகமாக உள்ளன? என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சில அதிகாரிகளும் இடைத்தர கர்களும் நலத்திட்டங்களை லாபக் &nbsp;குழாய்களாக மாற்றியுள்ளனர். இத னால் பழங்குடியினப் பெண்கள் மற் &nbsp;றும் குழந்தைகள் சலுகைகளிலி ருந்து விலக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான திட்டங்கள் பய னாளிகளைச் சென்றடைவதற்குப் பதிலாக மோசடிகளாக மாறி வரு கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி குற் &nbsp;றம்சாட்டியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.