முந்தய பக்கம்

குஜராத்: கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழப்பு!

4 hours before
குஜராத்: கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழப்பு!
<p>பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குஜராத் மாநிலத்தில் மதுவைத் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள், இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபலமான வெளிநாட்டு மதுபான வகையைச் சேர்ந்த போலி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருந்த மதுவை அருந்தியதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram