தீக்கதிர் விரைவு செய்திகள்
yesterday

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத்தில் கள்ளச்சாராயப் பலி 13ஆக உயர்வு

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத் தில் கடந்த வாரம் வெளிநாட்டு மது என்று கூறி, மத்தியப்பிரதேசத் திலிருந்து கொண்டு வரப்பட்ட கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், ஆகஸ்ட் 19 அன்று இந்தக் கள்ளச்சாராயத்தைக் குடித்தவர்களுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சுமார் 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 21 வரை அடுத்த 2 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆனது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தகைய சூழலில், கடந்த 48 மணிநேரத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 13 பேர் மட்டுமே கைது செய்யப்பட் டுள்ளனர்.

நாட்டின் முன்னணி உணவு நிறுவனங்களுக்குத் தடை

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI - எப்எஸ்எஸ்ஏஐ) குறைபாடுகளை கண்டறிந்து, தில்லி, டாமன் ஆகிய இடங்களில் 2 முக்கிய உணவு நிறுவனங்களுக்கு உரிமம் தொடர்பான இடைநீக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுதில்லியில் உள்ள ‘மார்ச் ரிட்டெய்ல் பிரைவேட் லிமிடெட்’ (Marche Retail Private Limited) நிறுவனத்தில் சுகாதாரம், தனிநபர் சுத்தம் மற்றும் பதிவேடுகளைப் பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட் டதை அடுத்து, அதன் உரிமம் 30 நாட்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அதே போல டாமனில் இயங்கும் ‘எஸ்டிபி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்’ (SDP Industries Private Limited) நிறுவனத்தின் நெய் தயாரிப்புகளில் தாவர ஸ்டீரால் (பீட்டா-சிட்டோஸ்டீரால் - தாவர கொழுப்பு) கலந்திருப்பது ஆய்வகச் சோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டதால், அந்நிறுவனத்திற் கும் இடைநீக்க தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இடைநீக்க உத்தரவை பெற்றுள்ள 2 நிறுவனங்களும் நாட் டின் மிகப்பெரிய உணவு தரநிலைகளை கொண்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“பெண்கள் பேசினால் மட்டுமே மோடிக்கு கலாச்சார அதிர்ச்சியா?”

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”பெண்களை ஆண்களின் கட்டுப்பாட்டிற் குள் வைத்திருக்க முயலும் பழைய காலத்து ‘மனுஸ்மிருதி’ சிந்தனை மிக மோசமானது. பெண் தனது குழந்தை பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், இளமைப் பருவத்தில் கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்த பிறகு மகனின் கட்டுப்பாட்டிலும்இருக்க வேண்டும் என மனுஸ்மிருதி கூறியுள் ளது. இது சுதந்திரம் இல்லாத மோசமான வார்த்தைகள். குறிப்பாக தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட் டத்தின் போது சிறுமிகள் ஆபாசமான வார்த்தைகளைப்பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடி தனக்கு ‘கலாச்சார அதிர்ச்சி’ ஏற்பட்டதாகக் கூறினார். அதே போராட்டத்தில் சிறுவர்களும் அவ்வாறு பேசியபோது பிரதமர் ஏன் அதிர்ச்சியடையவில்லை? சிறுவர்கள் செய்தால் தவறு இல்லையா? இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் பொருளாதாரம் அல்லது ராணுவம் அல்ல, மாறாக இந்தியாவின் 70 கோடி பெண்களின் தனித்துவமான கனவுகளும் பயணங்களும்தான். பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட உணர் திறன், அரவணைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். பெண்கள் தங்கள் சொந்த அடையாளத்திற்காக நிற்க வேண்டும். தந்தை, கணவன் அல்லது மகன்களுக்கு மட்டும் உரியவர்கள் அல்ல, தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்கள். ஆணாதிக்கம் உங் களை (பெண்களை) அச்சுறுத்துகிறது,கட்டுப்படுத்துகிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறி மாணவிகளைப் போராட அறைகூவல் விடுத்தார்.