7 சிங்கங்களை சிறிய உயிரினம் கொன்றதா? தவறான தகவல் பரப்பிய குஜராத் வனத்துறை
28 May 2026, 9:41 pm
<p><strong>7 சிங்கங்களை சிறிய உயிரினம் கொன்றதா?</strong> <strong>தவறான தகவல் பரப்பிய குஜராத் வனத்துறை </strong></p><p>பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ளது தேசியப் பூங்கா. இது நாட்டின் சிங்கங்களின் வாழ்விடம் என்ற பெருமையை பெற்ற பகுதியாகும். அதிக வனப்பரப்பை கொண்ட இந்த காடுகளில் சுற்றித் திரிந்து வரும் சிங்கங்களை பொதுமக்கள் வாகனங்களில் சென்று பார்வையிடுவதும் வழக்கம். இந்நிலையில், சமீப நாட்களாக 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தன. இது வனத்துறை அதிகாரி கள், சுற்றுலாவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குஜராத் வனத்துறை கூறுகையில்,“கிர் கிழக்கு, கிர் மேற்கு மண்டலங்களில் கடந்த வாரத்தில் 5 சிங்கங்கள் உயிரிழந்து விட்டன. அதா வது கடந்த 10 நாட்களில் 4 குட்டிகள், 3 பெரிய சிங்கங்கள் என மொத்தம் 7 சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன. ஒரு சிறிய உயிரினம் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கலாம்” என புதிராகக் கூறியது. ஆனால் உண்மையில் பெபேசியா என்ற நோய்த் தொற்றால் இறந்திருக்க லாம் என செய்திகள் வெளியாகியுள் ளது. இதனையடுத்து, குஜராத் மாநில வனத்துறை பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p>
