குஜராத் வெள்ளத்தில் மதம் கடந்த மனிதநேயம் நிவாரணப் பணிகளில் முன்னிற்கும் முஸ்லிம் மக்கள்
11 Jul 2026, 8:37 pm
<p><strong>குஜராத் வெள்ளத்தில் மதம் கடந்த மனிதநேயம் நிவாரணப் பணிகளில் முன்னிற்கும் முஸ்லிம் மக்கள்</strong></p><p>பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சூரத் மாவட்டம் கடுமையாக பாதிக்கப் பட்டது. அங்கு கனமழைக்கு 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் இயல்புநிலை தவித்து வருகின்ற னர். குறிப்பாக சூரத் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின் றன. சூரத் மட்டுமின்றி அகமதாபாத், வதோ தரா, பரூச் உள்ளிட்ட பல மாவட்டங்க ளும் கனமழை வெள்ளத்தால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநில வெள்ளப் பாதிப்புகளின் போது, மத வேறு பாடுகளைக் கடந்து முஸ்லிம் மக்கள் களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவார ணப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். அகமதாபாத், சூரத், வதோதரா, பரூச் உள்ளிட்ட பல மாவட்டங்களில் படகுகள் மூலம் சிக்கித் தவித்த மக்களை முஸ்லிம்கள் பாதுகாப்பாக மீட்டு வரு கின்றனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மசூதிகள், மதரஸாக்கள் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் தங்குமிடம் முஸ்லிம் மக்களால் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்ற மோடி - அமித் ஷாவின் பாஜக பல்வேறு அடாவடிகளை மேற்கொண்டு வரும் சூழலில், மதம் கடந்த மனிதநேயத்துடன் முஸ்லிம் மக்கள் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p>
