பிறந்த நாளன்று மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் 21 விவசாயிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு
22 Sept 2026, 10:32 pm

பிறந்த நாளன்று மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டம் 21 விவசாயிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

அகமதாபாத்பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்காக விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தில்அதானி மின் விநியோகத் திட்டத்தைத் தொடங்க உள்ளார். அதானியின் இந்த மின் விநியோகத் திட்டத்திற்குஎதிராக மோர்பி மாவட்டத்தின் 35 கிராம விவசாயிகள் கடந்த 4 மாதங்களாகத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக மோர்பி மாவட்டம் ஜெட்பார் கிராமத்தில் செப்டம்பர் 17அன்று பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவப்பொம்மைகளை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உடனே குஜராத் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் பிரதமரின் பிறந்த நாள்(செப். 17) கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், பொதுப் பாதையில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றித் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவும் 21 பேர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் குற்றச்சதி [61(2)], சட்டவிரோதமாகக் கூடுதல் [189(2)], கலவரத்தைத் தூண்டுதல் [192] உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 21 விவசாயிகள் மீது வழக்கு பாய்ந்துள்ளது. அவர்கள்விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த வழக்கு முற்றிலும் அடிப்படையற்றது என்றும், இதற்கெதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் மோர்பி விவசாயிகள் போராட்டத் தலைவர் நேஹுல் அம்ரிதியாதெரிவித்துள்ளார்.