தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதானிக்காக சூறையாடப்படும் பயிர்கள் குஜராத்தில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்

3 Jul 2026, 7:31 pm
அதானிக்காக சூறையாடப்படும் பயிர்கள் குஜராத்தில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்

அதானிக்காக சூறையாடப்படும் பயிர்கள் குஜராத்தில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வரும் குஜராத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா மற்றும் வட குஜராத் பகுதிகளில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி (சோலார் மற்றும் காற்றாலை) திட்டங்களுக்காக விவசாய நிலங்களில் மின்கம்பங்கள், உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் அமைக்கப்படுவதற்கு எதிராக குஜராத் மாநில விவசாயிகள் தீவிரப் போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர்.

1,000-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள்

கட்ச், சவுராஷ்டிரா மற்றும் வட குஜராத் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வார தொடக்கத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் சொந்த தொகுதியான காந்திநகரை நோக்கி 1,000-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் விவசாயிகள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்ட னர். அடுத்து கட்ச் பகுதியின் வரஜ்வானி கிரா மத்தில் இருந்து துவாரகா வரை நடைபயணம் மேற்கொள்ள விவசாய அமைப்புகள் திட்ட மிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக போராட்டத்தை முன்னி ன்று நடத்தும் குஜராத் மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுகையில், “குஜராத் மாநி லத்தின் கட்ச், சவுராஷ்டிரா மற்றும் வட குஜராத் பகுதிகளில் சோலார் மற்றும் காற்றாலை மின்கம்பங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது சில மாவட்டங்களில் உள்ள பிரச்சனை அல்ல. ஒரு முழு மாநிலத்தின் முக்கியமான பிரச்சனை ஆகும்.

குஜராத் முழுவதும் சுமார் 135 கிகாவாட் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தோராயமாக 20 மாவட்டங் களில் சுமார் 500 கி.மீ., தூரத்திற்குப் பரவியுள்ள 100 உயர் அழுத்த மின்சாரக் கடத்தும் பாதை கள் விவசாய நிலங்களில் அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றன.

இதுதொடர்பாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தங்களது நிலத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், 6 மாவட்டங் களில் கட்டுமானப் பணிகளும் தொடங்கி யுள்ளன. இதனால் சுமார் 5.5 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படலாம். கிட்டத்தட்ட 3,800 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உருக்குலைந்து போக வாய்ப்புள்ளது. டிராக்ட ர்கள் உள்ளிட்ட அறுவடை இயந்திரங்களை இயக்க முடிவதில்லை. நிலத்தின் மதிப்பு மற்றும் உற்பத்தித் திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகிறது.

அதானி

மின் நிறுவனங்கள் பல பத்தாண்டுகளாக இந்த உள்கட்டமைப்பு மூலம் நல்ல வருவாய் ஈட்டும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப் படும் ஒருமுறை இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நிலக்கையகப்படுத்துதல் சட்டம் 2013இன் படி, சந்தை விலையை விட 4 மடங்கு இழப்பீடு, ஒவ்வொரு மின் கம்பத்திற்கும் மாதம் ரூ.50,000 வாடகை மற்றும் ஒருமுறை தீர்வையாக ரூ.2 கோடி வழங்க வேண்டும். அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக விவசாய நிலங்கள் மின்கம்பங்களை நடுகின்றன. பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனை எதிர்க்கும் விவசாயிகள் சில நேரங்களில் காவல்துறையினரால் கடுமையாக நடத்தப்படுகின்றனர். இதனை வெறுமனே விட மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக அரசு அவசர ஆலோசனை

போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற குஜராத் அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு இப்போது வழங்கப்படுவதை விட மிகக் கூடுதலான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இறுதித் தொகை எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, புதிய கொள்கையை உருவாக்குவதற்கு முன்பாக விவசாய அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் இந்த விவகாரத்தின் சட்டப்பூர்வ பக்கங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதன் பிறகு முதலமைச்சருக்கு ஒரு வரைவு முன்மொழிவு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகளின் எதிர்ப்பால் ஓட்டம் பிடித்த பாஜக தலைவர்கள்

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் இந்த வார தொடக்கத்தில் நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜக ஆதரவு பெற்ற விவசாய அமைப்பு ( பாஜக கிசான் மோர்ச்சா) மட்டும் பங்கேற்றது. மாவட்டத்தின் 22 கிராமங் களைச் சேர்ந்த கிராமத் தலைவர்கள், விவசாயிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்த னர். உள்ளூர் பாஜக தலைவர்களும் கிராம மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பைச் சந்தித்தனர். இதனால் கூட்டத்திற்கு வராமல் பாஜக தலைவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.