தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ள நோட்டுகள் புழக்கம் பாதிக்கும் மேல் குஜராத்தில் மட்டும் பறிமுதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி!

11 May 2026, 10:43 pm
கள்ள நோட்டுகள் புழக்கம் பாதிக்கும் மேல் குஜராத்தில் மட்டும் பறிமுதல்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி!

கள்ள நோட்டுகள் புழக்கம் பாதிக்கும் மேல் குஜராத்தில் மட்டும் பறிமுதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி!

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நட வடிக்கையின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதை தற்போதைய புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்து கின்றன.

குறிப்பாக, கள்ள நோட்டுகளை ஒழிப்ப தாகக் கூறி கொண்டு வரப்பட்ட இந்த நட வடிக்கைக்குப் பிறகு, பாஜக நீண்டகாலமாக ஆட்சி புரியும் குஜராத் மாநி லத்திலேயே அதிகள விலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது அம்பலமாகி யுள்ளது.

குஜராத்தில் குவியும் கள்ள நோட்டுகள் 2016 முதல் 2024 வரை யிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 638 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் என அனைத்துமே அடங்கும்.

அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையில் பாதிக்கும் மேலாக, அதாவது 335.72 கோடி ரூபாய் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மட்டுமே பிடிபட்டுள்ளது. இதன் மூலம் கள்ள நோட்டு புழக்கத்தைத் தடுத்ததாக மோடி அரசு கூறிக்கொள்ளும் வாதம் பொய்யாகியுள்ளது. அதிகரிக்கும் ரொக்கப் புழக்கம் பணமதிப்பிழப்பின் மற்றொரு நோக்கமாகச் சொல்லப்பட்ட ‘ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்தல்’ என்பதும் ஏட்டள விலேயே உள்ளது.

2016-இல் 17.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பணப்புழக்கம், 2026-இல் 42.12 லட்சம் கோடி ரூபாயாக (137%) அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக் கின்றன.

முறைசாரா தொழில் களையும், சிறு குறு நிறு வனங்களையும் நிலை குலையச் செய்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஒரு மோசமான பொருளாதார நடவடிக்கை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.