தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடியின் நண்பர் அதானிக்கு எதிராக குஜராத் பாஜக அமைச்சரின் சகோதரர்கள் போராட்டம்

4 Jul 2026, 8:28 pm
மோடியின் நண்பர் அதானிக்கு எதிராக குஜராத் பாஜக அமைச்சரின் சகோதரர்கள் போராட்டம்
<p><strong>மோடியின் நண்பர் அதானிக்கு எதிராக குஜராத் பாஜக அமைச்சரின் சகோதரர்கள் போராட்டம்</strong></p><p>காந்தி நகர் பாஜக நீண்ட காலம் ஆட்சி செய்து வரும் குஜராத் மாநி லத்தில் அதானிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கட்ச், சவுராஷ்டிரா மற்றும் வட குஜராத் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (சோலார் மற்றும் காற்றாலை) திட்டங்க ளுக்காக விவசாய நிலங்களில் மின்கம்பங்கள், உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் அமைக் கப்படுவதற்கு எதிராகவும், உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும் குஜராத் மாநில விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் குஜராத் பாஜக அமைச்சரின் சகோதரர்களும் இணைந்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள பட்டிதார் சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதி யில், அதானி குழுமத்தின் உயர் அழுத்த மின் கடத்தி உள்கட்டமைப்புத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு முறையான இழப்பீடு கோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயப் போராட்டத்தி ற்கு ஆதரவாக 35 ஊராட்சித் தலைவர்கள் கைகோர்த்துள்ள நிலையில், குஜராத் மாநில பாஜக அமைச்சர் காந்திலால் அம்ருதியா வின் சகோதரர்களான பாரத்பாய் அம்ருதியா மற்றும் ராகேஷ்பாய் சிவ்லால் அம்ருதியா ஆகி யோரும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 டிகிரி வெயிலில்... மோர்பியின் ஜெட்பார் கிராமத்தில் நிலவி வரும் 40 டிகிரி கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயிகள் பந்தல் அமைத்துத் தங்களது போ ராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். பாஜக அரசின் அட்டூழியம் மற்றும் அதானி யின் அடாவடியை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில ஆண்கள் மொட்டையடித்து தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள னர். உண்ணாவிரதம் இருக்கும் சில விவ சாயிகளின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.