குஜராத்தில் மேலும் 5 பயங்கரவாதிகள் கைது'
17 Jul 2026, 8:22 pm
<p><strong>குஜராத்தில் மேலும் 5 பயங்கரவாதிகள் கைது'</strong></p><p>பாஜக ஆளும் குஜராத் மாநிலம் பதான் மாவட்டத் தின் சித்பூர் தாலுகாவில் பாகிஸ்தா னைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘ஜெய்ஷ்-இ-முகமது’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் 5 பேரை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் வெள்ளியன்று கைது செய்தனர். கடந்த ஜூலை 3ஆம் தேதி 8 பேர் கைது செய்யப்பட்டநிலையில், தற் போது கைது செய்யப்பட்ட 5 பேருடன் சேர்த்து இந்த வழக்கில் கைதானவர் களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள் ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் மெஹ்சானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை ஏ.டி.எஸ். காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
