கிண்டி குதிரை பந்தய மைதானம் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றம்
10 May 2026, 1:25 am
<p><strong>கிண்டி குதிரை பந்தய மைதானம் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றம்</strong></p><p>சென்னை, மே 9- சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியை 118 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ‘சுற்றுச்சூழல் பூங்கா’வாக (மாற்றும் பணிகளைத் தோட்டக்கலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, மாநகராட்சி சார்பில் நான்கு குளங்கள் மற்றும் இரண்டு ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் பூமிக்குள் இறங்குவதற்கும், வெள்ளத்தைத் தடுப்பதற்கும் ஏற்ற வகையில் ‘பயோ-ஸ்வேல்ஸ்’ கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 37.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்படவுள்ளன. மேலும், 2.5 கி.மீ தூரத்திற்கு மகிழம், செண்பகம் போன்ற பாரம்பர்ய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் சித்த மருத்துவ மூலிகைத் தோட்டம் மற்றும் நீர்நிலை சார்ந்த பறவைகள் வாழ்விடங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
