முந்தய பக்கம்

வழிகாட்டும் ஒளிவிளக்கு

28 Feb 2026, 2:29 pm
வழிகாட்டும் ஒளிவிளக்கு
<p><strong>வழிகாட்டும் ஒளிவிளக்கு!</strong></p> <p>நாடக நடிகையாக &nbsp;இருந்து நாடறிந்த கம்யூனிஸ்ட் ஆனவர் அம்மா ஜானகி! விடுதலைக்கு முன்னும் பின்னும் மக்கள் பணியில் முன்னணியில் நின்றவர். பிரிட்டிஷ் ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் சிறைப்பட்டவர். தென்னிந்தியாவில் பாதுகாப்புச் சட்டத்தில் கைதான முதல் பெண் அவரே! சிறைவாழ்க்கை தந்த ஆஸ்துமா வாழ்வின் இறுதிவரை வாட்டிய போதும் போராட்ட வாழ்க்கையில் தடம் புரளாதவர். நாடகத்தில் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் கட்சிக்காகச் செலவழித்தவர். நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நிலங்களை பெற்றுத் தந்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை முகம் அம்மா ஜானகி! அவர் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்களை அணி சேர்த்தவர். மாதர் சங்கத்தின் மகத்தான தலைவராகத் திகழ்ந்தவர். மக்கள் மன்றத்தில் உழைத்ததால் சட்டமன்றத்துக்கும் சென்றவர். &nbsp;எளிமையின் சின்னம்! உழைப்பின் உருவம்! பொதுவுடமைத் தத்துவத்தின் பெருமை மிகு தலைவி! அவர் என்றென்றும் வழி காட்டும் ஒளிவிளக்கு!</p>
Share
FacebookXWhatsAppTelegram