அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் அமையக் கூடாது!
17 Nov 2025, 3:10 pm

அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் அமையக் கூடாது!

தமிழக அரசின் வரைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரை கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் (Draft Guide lines/SOP), இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதி யான கூடுகை உரிமைகளை நேரடியாக மீறும் வகை யில் உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாள ரை நவம்பர் 17, 2025 அன்று நேரில் சந்தித்து விரிவான கடிதத்தை வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறை வேற்றுவது என்ற முறையில் அரசு வகுத்துள்ள இந்த நெறிமுறைகள், நடைமுறையில் மக்களின் பேச்சு ரிமை (அரசியல் சட்ட உறுப்பு 19(1)(a)), அமைதி யான முறையில் கூடும் உரிமை (உறுப்பு 19(1)(b)), சமத்துவ உரிமை (உறுப்பு 14) மற்றும் தனிநபர் சுதந்திரம் (உறுப்பு 21) ஆகியவற்றை மிகைப்படி யான, அநியாயமான கட்டுப்பாடுகளால் அடக்கி, ஜனநாயகத்தின் சாராம்சத்தைப் புறக்கணிப்பதாக அக்கடிதத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் தவறான பொருள்படுத்தல்

உயர்நீதிமன்றம் பொதுக்கூட்டங்களை முழுமை யாகத் தடை செய்யவோ அல்லது நிதித் தடைகள் விதிக்கவோ உத்தரவிடவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு அரசுப் பொருட்களின் பாதுகாப்பிற்கான வெளிப்படையான நடைமுறைகள் வகுக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால், அரசு இந்த உத்தரவை தேர்ந்தெடுத்தவாறு தவறாகப் பொருள் கொண்டு, குடிமக்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இந்த வரைவைக் கொண்டு வந்துள்ளது. இந்த வழி காட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே கருத்து தெரி வித்திருந்தும், தற்போது எழுத்துப்பூர்வமான ஆட்சே பணையை அரசு கேட்டுக்கொண்ட அடிப்படையில் சமர்ப்பிப்பதாகவும் அக்கடிதம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் என்பது தடை விதிக்கும் அதிகாரம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிதிக் கட்டுப்பாடுகளும் ஜனநாயகப் பங்கேற்பும்

கட்சியின் ஆட்சேபணையில், வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள பாதுகாப்புத் தொகை விதி மிகவும் அபாயகரமானது என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

H ரூபாய் 1,00,000 முதல் 20,00,000 வரை பாது காப்புத் தொகை (Security Deposit) செலுத்தக் கட் டாயப்படுத்துவது, அரசியல் பங்கேற்பை பணத்தின் அடிப்படையில் அளவிடும் செயலாகும்.

H இதன் மூலம், சிறு அரசியல் கட்சிகள், தொழிலாளர் இயக்கங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்க ளைப் பங்கேற்பதிலிருந்து விலக்கி, சமத்துவ உரி மைக்கு (அரசியல் சட்ட உறுப்பு 14) எதிராகவும், நியாயமான நடைமுறை உரிமைக்கு (உறுப்பு 21) எதிராகவும் உள்ளது.

H இத்தகைய நிதி சார்ந்த நிபந்தனைகள் அரசியல மைப்பில் அனுமதிக்கப்படும் “நியாயமான கட்டுப் பாடு” என்ற வரையறைக்குள் வராது எனவும், இதற் கான சட்ட அங்கீகாரம் அல்ல எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. காப்புத் தொகைக்கு பதிலாக, ஏற்படும் சேதங்களுக்குப் பொறுப்பு ஏற்பதாகக் கூறும் பொறுப்பு உறுதிமொழிக் கடிதம் பெற்றாலே போது மானது என்றும் கட்சி பரிந்துரைத்துள்ளது.

முன் அனுமதி மற்றும் கால வரம்பு மீறல்கள்

அனுமதி பெறுவதில் விதிக்கப்படும் நிபந்தனை கள், அடிப்படை உரிமையை “அனுமதி சார்ந்த சலுகை யாக” மாற்றுகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் கடிதம் விமர்சித்துள்ளது.

H 10 முதல் 30 நாட்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம், உடனடி அரசியல் எதிர் வினைகள் (Spontaneous Assembly) மற்றும் காலத் தின் தேவைக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத் தும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைப் பறிக்கிறது. இது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-க்கு எதிரானது. அவசரமாகக் கூட்டப்படும் கூட்டங்களு க்கு 24 முதல் 48 மணி நேரத்துக்குள் அனுமதி வழங்கும் சிறப்பு நடைமுறைகள் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

H அமைதியான முறையில் கூடும் உரிமை என்பது முன் அனுமதி பெறுவதைச் சார்ந்ததல்ல; மக்கள் கூடுவதால் “பொது அமைதி குலையும் அபாயம்” தெளிவாக இல்லாவிடில் அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்றும், இது முன் தடை (Prior Res traint) போன்றது எனவும் கட்சி எச்சரித்துள்ளது.

H ஏற்கனவே காவல்துறை சட்டம், 1861, பிரிவு 30 மற்றும் சென்னை நகர காவல் சட்டம், 1888, பிரிவு 41 போன்ற சட்டவிதிகள் மூலம் பொதுக் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வரும் நிலை யில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை (SOP) சட்டத்தை மீறிய (ultra vires) நடவடிக்கையே ஆகும்.

பாகுபாடும் சமத்துவமின்மையும்

விதிமுறைகளில் உள்ள பாகுபாடு அரசியல மைப்புச் சட்டப் பிரிவு 14-ஐ மீறுவதாக மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

H 5,000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளைப் பொருத்துவது, அரசு நிகழ்வுகள் மற்றும் மதச் சடங்குகளை விலக்குவது பாகுபாட்டிற்கு வழிவகுத்து, சட்டத்தின் முன் சமத்து வத்தை மீறுகிறது. அரசியல் கூட்டங்களை எண் ணிக்கை அடிப்படையில் கட்டுப்படுத்துவது பொருத்தமல்ல.

H“அங்கீகரிக்கப்பட்ட இடங்கள்” என்ற வரம்பு விதிப் பதும், அமைதியான கூட்டங்கள் அனைத்துப் பொது நிலங்களிலும் நடத்த உரிமை உண்டு என்ற கோட் பாட்டை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகமும் கண்காணிப்பும்

அரசு வெளியிட்டுள்ள இந்த வரைவு, அதிகாரிக ளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.

H காவல் கண்காணிப்பாளருக்கு முழுமையான சுய விருப்ப அதிகாரம் அளிப்பது இயற்கை நீதி முறை மையை மீறுகிறது. எந்த மாற்றமும் பொதுமக்கள் அறிவிப்பு மற்றும் சட்டமியற்றும் கண்காணிப்பின் வழியாகவே செய்யப்பட வேண்டும்.

H சிசிடிவி, ட்ரோன் போன்ற கடுமையான கண்கா ணிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுக்குப் பின் னால் கலந்து கொண்டவர்களின் விவரங்களைப் பதிவு செய்வது, மக்கள் மத்தியில் அச்சச்சூழலை (chilling effect) உருவாக்கும் எனவும், இது தனி யுரிமை உரிமைக்கு (Puttaswamy v. Union of India) எதிரானது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

H காவல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தாமாகவே “விதிமீறல்” என்று தீர்மானித்து வைப்புத் தொகை யைப் பறிமுதல் செய்வது சட்டவிரோதமானது. இதற்கு முன் காரணம் தெரிவித்து நோட்டீஸ் மற்றும் கேட்பு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றமே தண்டனை விதிக்க முடியும்.

H “குறைந்த / மித / அதிக ஆபத்து” என காவல்துறை க்கு தன்னிச்சை அதிகாரம் அளிப்பது தவறானது; மற்றும் தவறாகப் பயன்படுத்தக்கூடியதாகும்.

கட்சியின் முக்கிய கோரிக்கைகளும் வலியுறுத்தல்களும்

மேற்கண்ட கடிதத்தில் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், தமிழக அரசுக்கு பின்வரும் முக்கி யக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்:

H தற்போதுள்ள சட்ட விதிகள் போதுமானவை என்ப தால், தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத் தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, இந்தப் புதிய விதிகள் அவசியமற்றவை என பதில் பிரமாண வாக்குமூலம் அளித்திட வேண்டும்.

Hஅரசு அலுவலகங்கள், ஆலை வாயில்கள் போன்ற இடங்களில் தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆர்ப் பாட்டம் மற்றும் வாயிற் கூட்டங்கள் நடத்திட அனு மதிக்கக் கூடாது என்ற நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்.

H பொதுமக்களின் பாதுகாப்பு என்பது அரசின் அடிப்ப டைக் கடமை; அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிபந்தனையாக மாற்றக் கூடாது.

H 3 மணி நேர வரம்பு காரணமற்றது; ஒலி மற்றும் பாது காப்பு நிபந்தனைகளுடன் இரவு 10 மணி வரை நீட்டிப்பு அனுமதிக்க வேண்டும். கலை நிகழ்ச்சி கள், இலக்கிய நிகழ்வுகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

H பொறியாளர் சான்றிதழ் போன்ற நடைமுறை சிர மங்களை நீக்கி, சிறிய மேடைகளுக்கு சுய அறிவிப்பு போதுமானது என அறிவிக்க வேண்டும்.

மொத்தத்தில், முழு வரைவு வழிகாட்டு நெறிமுறை களும்(SOP) அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை சுதந்திரங்களை நிர்வாகக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்து, ஜனநாயகத்தின் சாரத்தை புறக்க ணிக்கிறது. இந்த நிர்வாக உத்தரவு அரசியல மைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வராதது (ultra vires); மற்றும் தொடக்கத்திலிருந்தே செல்லாதது (void ab initio) ஆகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.