மருத்துவமனைகளுக்கு சொத்துவரி விதிக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும்
11 Feb 2026, 5:52 pm
<p><strong>மருத்துவமனைகளுக்கு சொத்துவரி விதிக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க வேண்டும்</strong></p>
<p>சேலம், பிப்.11- தனியார் மருத்துவமனைகளுக்கு சொத்து வரி விதிக்க வழிகாட்டு நெறி முறைகள் உருவாக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து புதனன்று சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் பேட்டியளிக்கும் போது, சேலம் மாநகராட்சி மூலம் சேலத் தில் உள்ள நடுத்தர மற்றும் சிறு மருத் துவமனைகளுக்கு சொத்து வரி அதிகள வில் விதிக்கப்படுகிறது. தமிழக முழு வதும் மருத்துவமனைகளுக்கு சொத்து வரிவிதிப்பு என்பது ஒரு சீராக இல்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. சேலத்தில் மட்டும் தற்போது 200 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி அதிகரித்து உள்ளது. ஆனால் மற்ற ஊர்களில் ஐந்து முதல் 10% வரை மட்டுமே மருத்துவமனைக ளுக்கு சொத்துவரி விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மருத்துவமனைகளுக்கு விதிக்கப்படும் வரியானது எத்தனை படுக்கையில் நோயாளிகள் உள்ளனர் என்பதை வைத்து வரிவிதிக்கப்படுவதில்லை. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகளுக்கு சராசரியாக 7 லட்சம் முதல் 80 லட்சம் வரை வரி வசூலிக்கப் படுகிறது. வரிவசூல் தன்னிச்சையாக முடிவு செய்யப்படுகிறது. நடப்பாண்டு முதல் தவணை வரி கட்டிவிட்டோம். சொத்து வரி அதிகமாக உள்ளதால் இரண்டாவது தவணை வரியை கட்டுவது இல்லை என முடி வெடுத்து உள்ளோம். மேலும், மாநிலம் முழுவதும் சொத்துவரிக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண் டும். எங்களது கோரிக்கை நிறைவேற் றாதபோது மாநில அளவில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றனர். இதில், இந்திய மருத்துவ சங்க நிர் வாகிகள் பிரகாசம், சேலம் ஐஎம்ஐ கிளையின் மாவட்டத் தலைவர் ராஜேஷ் செங்கோடன், செயலாளர் விஷ்ணு பிர சாத், பொருளாளர் சிவகுமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
