தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“பணம் இல்லை என்றாலும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதல்”

27 Nov 2025, 3:11 pm
“பணம் இல்லை என்றாலும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதல்”
<p>பணம் இல்லை என்ற காரணத்திற்காக நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக் கப்படக்கூடாது என்று தனியார் &nbsp;மருத்துவமனைகளுக்கான முக்கிய மான வழிகாட்டுதல்களை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சிகிச்சை விகிதங்களை மருத்துவ மனைகளில் காட்சிப்படுத்த வேண்டும். இவை ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் கிடைக்கச் செய்ய வேண்டும். சிகிச்சை தகவல்களை நோயாளிகள் வெளியேறும் போது அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் மருத்து வர்களின் தகவல்களையும் சிகிச்சை செலவுகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், பணம் இல்லாத சந்தர்ப்பங்களில் சிகிச்சையை மறுக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற ஒற்றை அமர்வு முன்பு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஐஎம்ஏ நிர்வாகம் இதற்கு எதிராக கூடுதல் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவணங்கள் இல்லா விட்டாலும், நோயாளிக்கு சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்றும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை சிறந்த வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்றலாம். இதற்கான பொறுப்பு முதலில் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு உள்ளது என்பதை உயர்நீதிமன்றம் நினைவூட்டி யது. தனியார் மருத்துவமனைகளில் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட வேண்டும். பெறப்படும் புகார்களை ஏழு நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். எடுக்க முடி யாத புகார்கள் இருந்தால், அவற்றை மாவட்ட நிர்வாக அதிகாரியிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.