குடியாத்தம்: பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
5 Jun 2026, 11:35 pm
<p><strong>குடியாத்தம்: பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு</strong></p><p>வேலூர், ஜூன் 5- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும் என குடியாத்தத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக்குழுவினர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வி மற்றும் கவிதா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அவர்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், சிறுவயது திருமணங்களைத் தவிர்த்தல் மற்றும் தேவையில்லாத மொபைல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், ஆபத்துக் காலங்களில் பெண்கள் அவசர உதவி பெறத் தமிழக அரசின் ‘காவல் உதவி’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும், பழங்குடியின மக்கள் கல்விக்கான அரசு உதவித்தொகைகளைப் பெ</p>
