முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

15 Jul 2026, 9:27 pm
திருச்சி விரைவு செய்திகள்

கூடலூரில் கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 6 பேர் கைது

தேனி, ஜூலை 15- கூடலூரில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கூடலூர் வீருசிக்கம்மாள் கோயில் அருகே வடக்கு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ராஜதானி பெருமாள்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (26), கருநாக்காமுத்தன்பட்டியைச் சேர்ந்த அபிஷேக் (23), மகேஷ் (25) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 17வயது சிறுவன், கூடலூர் நெல்லுகுத்தி புளியமரம் தெரு வைச் சேர்ந்த தீபன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் கூடலூர் அரசமரத்தெருவைச் சேர்ந்த ஜெயா (40) என்ற பெண்ணிடம் கஞ்சா வாங்கி வந்துள்ளனர். அந்த பெண்ணிடம் இருந்து மேலும் ஒரு கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 பேரும் கைது செய்யப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி,ஜூலை 15- தேனி மாவட்டத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடை பெறும் என மாவட்ட ஆட்சி யர் வைத்திநாதன் தெரிவித் துள்ளார். தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவ சாய சங்கப் பிரதிநிதிகள் அந் தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறை திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சி யரிடம் மனுக்களாக வழங்க லாம் என்று ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram