தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூடலூரில் கார்பன் நியூட்ரல் காபி பார்க் அமைக்க வேண்டும் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்க மாநிலப் பேரவையில் தீர்மானம்!

29 Oct 2026, 8:50 pm
கூடலூரில் கார்பன் நியூட்ரல் காபி பார்க் அமைக்க வேண்டும் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்க மாநிலப் பேரவையில் தீர்மானம்!

கூடலூரில் கார்பன் நியூட்ரல் காபி பார்க் அமைக்க வேண்டும் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்க மாநிலப் பேரவையில் தீர்மானம்!

கூடலூர், அக். 29 –கூடலூரில் கார்பன் நியூட்ரல் காபி பார்க் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பேரவைக் கூட்டம் நீலகிரி மாவட்டம்கூடலூரில் தோழர் எம். செல்லையா நினைவரங்கில் நடைபெற்றது.

இம்மாநிலப் பேரவைக் கூட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் இ.பி. சூர்யா கோஸ் தலைமை தாங்கி

னார். மாவட்டச் செயலாளர் டி. சுதர்சன் அனைவரையும் வரவேற்றார். காபி விவசாயிகள் கூட்டமைப்பின் அகிலஇந்தியப் பொதுச் செயலாளர் பி. கிருஷ்ணபிரசாத் பேரவையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. யோஹன்னான் வேலை அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசினார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டச் செயலாளர் ஜெயின் ஆண்டனி மற்றும் அகில இந்தியக் கமிட்டி உறுப்பினர் பேராசிரியர் ஜோஸ் ஜார்ஜ் ஆகியோர் பேரவையை வாழ்த்தி உரையாற்றினர்.

தீர்மானங்கள்

இம்மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

• கூடலூரில் கார்பன் நியூட்ரல் காபி பார்க் அமைக்கப்பட வேண்டும்.

• தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காபிக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ. 25 ஆதார விலை வழங்கப்பட வேண்டும்.

• வனவிலங்குகளால் காபி தோட்டங்களுக்கும் விவசாயி களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

• வனவிலங்குகளால் அழிக்கப்படும் பயிர்களுக்குச் சந்தை விலைக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இத்தீர்மானங்களைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனப் பேரவை கேட்டுக்கொண்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி. பெருமாள் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.ஏ. குஞ்ஞுமுகமது அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

கூட்டத்தின் நிறைவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் தலைவராக தா. அஜாய்கோஷ், மாநிலச் செயலாளராக ஏ. யோஹண்ணான், மாநிலப் பொருளாளராக அண்ணா

மலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 21 பேர் கொண்ட மாநிலக் குழுவும் அமைக்கப்பட்டது. புதிய

மாநிலத் தலைவர் தா. அஜாய் கோஷ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.