“உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்”: போக்குவரத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்துக!
4 Jan 2026, 4:05 pm
<p><strong>“உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்”: போக்குவரத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்துக!</strong></p>
<p>சிஐடியு வலியுறுத்தல் சென்னை, ஜன. 4 – தமிழக அரசு அறிவித்துள்ள ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதி யத் திட்டத்தை’ (TAPS) அரசு ஊழி யர்கள், ஆசிரியர் அமைப்புகள் வர வேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தைப் போக்குவரத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழி யர்களுக்கான வாழ்வாதாரக் கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பல்வேறு சங்கங்கள் வலி யுறுத்தியுள்ளன. போக்குவரத்து ஊழியர்களின் சட்டப் போராட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் விடுத் துள்ள அறிக்கையில், “அரசு ஊழி யர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஓய்வூதியத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், 1.9.1998 முதல் போக்கு வரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்தப் படியான ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது. அதனைத் தன்னிச்சை யாக முடக்கிவிட்டு, அரசு ஊழியர்களுக் கான திட்டத்தைப் போக்குவரத்துத் துறையில் திணித்தது சட்டவிரோதமா னது. இது குறித்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைப் போக்குவரத்து ஊழியர் களுக்கும் தடையின்றி அமலாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓய்வுபெற்றோருக்கான பணப்பலன்களைப் பொங்கலுக்குள் வழங்க அமைச்சர் ஒப்புக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் ஒப்பீடு தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர். இளங்கோ வன், தமிழக அரசின் இத்திட்டம் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விடப் பல மடங்கு சிறந்தது எனக் குறிப்பிட் டுள்ளார். “ஒன்றிய அரசின் திட்டத்தில் நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் பாதுகாப்பு இல்லை. ஆனால் தமிழக அரசே முழுப் பொறுப்பேற்பது ஊழியர்களுக்குப் பாதுகாப்பானது. இருப்பினும், கம்யூட்டேசன் மற்றும் 80 வயதுக்கு மேலான கூடுதல் ஓய்வூதியம் போன்ற பழைய ஓய்வூதியத் திட்ட (OPS) அம்சங்கள் இதில் இல்லாதது ஒரு குறையே” என அவர் தெரிவித்து உள்ளார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் குமுறல் சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ஏ. ஜெசி மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். தேவமணி ஆகி யோர் அரசின் அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்து உள்ளனர். “40 ஆண்டுகாலமாகப் பணியாற்றும் தங்களுக்குக் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதியத்தை ரூ. 7,850 ஆக உயர்த்த வேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மறியல் மற்றும் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட் டங்களை மேற்கொள்ளப் போவ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச. மயில், இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எனக் குறிப்பிட் டுள்ளார். “22 ஆண்டுகால ஓய்வூதிய மில்லா இருளுக்கு இத்திட்டம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 6.75 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதுகாக்கப்பட்டுள்ளது. 10% பங்களிப்புத் தொகை ஒரு குறையாகத் தெரிந்தா லும், எதிர்காலத்தில் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பெற இத்திட்டம் ஒரு நல்ல அடித்தளம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p>
