தீக்கதிர் விரைவு செய்திகள்
8 Oct 2026, 11:57 pm

ஜிஎஸ்டி குற்றவியல் வழக்கு தொடர ரூ.5 கோடி

57ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வியாழனன்று தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஆலோசனை மற்றும் விவாதத்தின் அடிப்படையில், ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான தொகையின்வரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் வரி ஏய்ப்பு சம்பவங்களில் உடனடி கைது நடவடிக்கைகளுக்குப் பதிலாக, வரி வசூல், வட்டி மற்றும் அபராதம் போன்ற சிவில் நடைமுறைகள் மூலம் தீர்வு காணமுன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதுவரை ரூ.1 கோடியாக இருந்த குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச வரி ஏய்ப்பு வரம்பு, தற்போதுரூ.5 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ‘மக்கள் நீதிமன்றம்’

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ராஜினாமா செய்யக் கோரியும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சுதந்தர பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘மக்கள் நீதிமன்றம்’ என்றபெயரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ்ரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பால்கி, பாபலேஷ்வர் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் கன்னட எழுத்தாளர் தேவனூரு மகாதேவாவும் இதில் கலந்து கொண்டார்.