புதர் மண்டி கிடக்கும் வேளாண் அலுவலகம்
5 Feb 2026, 3:40 pm
<p><strong>புதர் மண்டி கிடக்கும் வேளாண் அலுவலகம்</strong></p>
<p>உடுமலை, பிப்.5- மடத்துக்குளம் அருகே புதர் மண்டி காணப்படும் வேளாண் துறை அலுவல கத்தை முறையாக பராம ரிக்க வேண்டும் என விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண் துறை சார்பில், வருவாய் தாலுகாவில் தனியாக வேளாண் துறை அலு வலகம் செயல்பட்டு வந்த நிலையில், தற் பொழுது உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல அலுவலகங்கள் திறக்கப்படா மல் உள்ளன. இதனால் விவசாயிகள் தங்களின் தேவைக்கு உடுமலை அல்லது மடத்துக்கு ளத்தில் இருக்கும் தலைமை அலுவகத்திற்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது. இந்நிலை யில், மடத்துக்குளம் தாலூகா, துங்காவி கிரா மத்தில் இருக்கும் வேளாண் துறை அலுவ லகம், பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் துறை சார்ந்த அலுவலர்கள் எப்போது வருகி றார்கள்? எப்போது போகிறார்கள்? என்று தெரியாமல் உள்ளது. விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஒவ்வொரு முறையும் தலைமை இடமான மடத்துக்குளம் சென்று வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு தமி ழக அரசு கொண்டு வரும் சலுகைகள் குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு தெரி யாமலும் உள்ளது. இதனால் துங்காவி கிரா மத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்த வேளாண் துறை அலுவலகத்தை, முறையாக பராமரிப்பு செய்து, துறை சார்ந்த அலுவலர்கள் தினந்தோறும் வரும் வகையில் வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர்.</p>
<p> </p>
