தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ‘ஜன ஆக்ரோஷ யாத்திரை’க்கு மத்தியப்பிரதேசத்தில் பெருகும் ஆதரவு

21 Mar 2026, 2:42 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ‘ஜன ஆக்ரோஷ யாத்திரை’க்கு மத்தியப்பிரதேசத்தில் பெருகும் ஆதரவு
<p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் &lsquo;ஜன ஆக்ரோஷ யாத்திரை&rsquo;க்கு மத்தியப்பிரதேசத்தில் பெருகும் ஆதரவு</strong></p> <p>போபால் மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமைகளை வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய &lsquo;ஜன ஆக்ரோஷ யாத்திரை&rsquo; எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. &nbsp;விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாமை, தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயம் ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த யாத்தி ரையில் பெருந்திரளாகப் பங்கேற்று வருகின்ற னர். இந்த மக்கள் எழுச்சியின் அடுத்த கட்ட மாக, வரும் மார்ச் 24 அன்று தில்லியில் நடைபெற வுள்ள பிரம்மாண்டமான பேரணியில் பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தின் பின்னணியும் முக்கியக் கோரிக்கைகளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் செல்லும் இந்த &lsquo;ஜன ஆக்ரோஷ யாத்திரை&rsquo;, உழைக்கும் வர்க் கத்தின் அடிப்படைத் தேவைகளை மையமாக வைத்துத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்குச் சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதில் முதன்மையாக ஒலிக்கி றது. சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி சி2+50 (உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபம்) &nbsp;சூத்திரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மேலும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் யாத்திரை நெடுகிலும் பொதுமக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. தலைவர்களின் உரை மற்றும் &nbsp;மக்கள் பங்கேற்பு இந்த யாத்திரையை முன்னின்று நடத்தும் சிபிஎம் தலைவர்கள், பாஜக அரசின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் ஏழை எளிய மக்கள் வஞ்சிக் கப்படுவதாகச் சாடினர். சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் மற்றும் மாநிலச் செயலாளர் ஜஸ்விந்தர் சிங் யாத்திரையின் தொடக்க நிகழ்வு களில் பேசுகையில்,&rdquo;மத்தியப் பிரதேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. பழங்குடியின மக்களின் நில உரிமை கள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை&rdquo; என்று குறிப்பிட்டார். மேலும் இந்த யாத்திரையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்கள் இணைந்து &nbsp;செயல்பட்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழி யர்கள் தங்கள் பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுக்காக இந்த யாத்திரையில் பெரு மளவில் இணைந்துள்ளனர். தில்லி பேரணிக்குத் தயாராகும் உழைக்கும் வர்க்கம் மத்தியப் பிரதேசத்தின் மூலை முடுக்குகளில் இருந்து கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு அலை, &nbsp;வரும் மார்ச் 24 அன்று தில்லியில் நடை பெறவுள்ள தேசிய அளவிலான பேரணியில் சங்கமிக்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழு வதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவ சாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பழங்குடி யின மக்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் தில்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். &ldquo;எங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. போபாலில் தொடங்கிய இந்த ஆக்ரோஷம் தில்லி செங்கோட்டை வரை எதிரொலிக்கும்&rdquo; என்று போராட்டக் குழுவினர் சூளுரைத்துள்ளனர். பழங்குடியின மக்களின் எழுச்சி மத்தியப் பிரதேசத்தின் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட பழங்குடியின மக்கள், வன உரிமைச் சட்டம் முறையாக அமல்படுத்தப் படாததற்குத் தங்கள் கண்டனத்தைப் பதிவு &nbsp;செய்துள்ளனர். நில ஆக்கிரமிப்பு மற்றும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்காகப் பழங்குடியினரை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த யாத்திரை அவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தங்களின் பூர்வீக நிலத்தைப் பாதுகாக்கவும், முறையான வேலைவாய்ப்பைப் பெறவும் அவர்கள் இந்தப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், சிபிஎம் முன்னெடுத்துள்ள இந்தத் தொடர் போராட்டங்கள் மாநில அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. சாதி மற்றும் மத ரீதியாக மக்க ளைப் பிரிக்க நினைக்கும் அரசியலுக்கு மாற் றாக, வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னி றுத்தி உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி பாஜக அரசுக்குப் பெரும் சவா லாக உருவெடுத்துள்ளது. &nbsp; &nbsp; (லெப்ட் வியூஸ்)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.