அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வை ஏற்க முடியாது
21 Dec 2025, 3:21 pm
<p><strong>அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வை ஏற்க முடியாது</strong></p>
<p>இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிலவிய நிலைகளைத் தாண்டிவிட்டது என்று ஏற்றத்தாழ்வு குறித்த தனது பணிகளுக்காகப் புகழ்பெற்ற தாமஸ் பிக்கெட்டி குறிப்பிட்டபோது, பெரும் சர்ச்சை வெடித்தது. இப்போது, 2026-ஆம் ஆண்டுக்கான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிக்கெட்டியின் கூற்று தெள்ளத்தெளிவாகி இருக் கிறது. இந்த அறிக்கை தீவிரமான ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, என்பதை அதுவே பின்வருமாறு விளக்குகிறது: “உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2026 (World Inequality Report 2026) என்பது, 2018 மற்றும் 2022 பதிப்புகளைத் தொடர்ந்து, இந்த முதன்மைத் தொடரின் மூன்றாவது பதிப்பாகும். இந்த அறிக்கை கள், உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்துடன் தொடர்பு டைய மற்றும் உலகளாவிய ஏற்றத்தாழ்வின் வர லாற்றுப் பரிணாமம் குறித்த மிகப்பெரிய தரவுத் தளத்திற்குப் பங்களிக்கும், உலகம் முழுவதிலு மிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் பணிகளிலிருந்து பெறப்பட்டவை. இந்த கூட்டு முயற்சி, ஏற்றத்தாழ்வு குறித்த உலகளாவிய விவாதங் களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், அறிஞர்கள் மற்றும் குடிமக்கள் ஏற்றத்தாழ்வின் அளவு மற்றும் காரணங் களைப் புரிந்துகொள்ளும் விதத்தை மறுவடிவ மைக்க இந்த குழு உதவியுள்ளது. இது உலகப் பணக் காரர்களின் பிரிவினைவாதத்தையும், உயர்மட்ட வரி நீதிக்கான அவசரத் தேவையையும் முன்னிலைப் படுத்துகிறது. அவர்களின் கண்டுபிடிப்புகள், தேசிய நாடாளுமன்றங்கள் முதல் ஜி20 வரையிலான மன்றங்களில், நிதி சீர்திருத்தம், செல்வ வரிவிதிப்பு மற்றும் மறுபகிர்வு குறித்த தேசிய மற்றும் சர்வதேச விவாதங்களுக்குத் தகவலளித்துள்ளன.” இந்திய பில்லியனர்கள் பொற்காலம் சமீபத்திய அறிக்கை ஒன்று, இந்திய பில்லியனர் களின் தற்போதைய பொற்காலம் இந்தியாவில் வரு மான ஏற்றத்தாழ்வை கடுமையாக அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு இப்போது உலகின் மிக உயர்ந்த நிலைகளில் ஒன்றாக உள்ளதுடன், அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவை விடவும் மிகவும் விரிவான அளவில் இருக்கிறது. இந்தியாவுடைய பணக்காரர் களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் விரிவடைந்துவிட்டது. பிக்கெட்டி உட்பட இந்த ஆய்வை இணைந்து எழுதிய பொருளாதார வல்லுநர்கள் குழுவின்படி, சில அளவீடு களின்படி பார்த்தால், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததை விட இப்போது இந்தியா வில் வருமானப் பங்கீடு மிகவும் மோசமான விதத்தில் மிகவும் குறைவான நிலையில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியைவிட அதிக சமத்துவமற்றது ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2024 உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, இந்தியாவில் தற்போதைய பில்லியனர்களின் எண்ணிக்கை (ஒரு பில்லியனர் என்றால் 100 கோடி ரூபாய் உள்ள ஒரு கோடீஸ்வரர்) 271ஆக உள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும் 94 புதிய பில்லியனர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டையும் விட இது அதிக எண்ணிக்கை யிலான புதிய பில்லியனர்கள் ஆவர். இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் (லட்சம் கோடி) டாலராகும். இது உலகின் மொத்தச் செல்வத்தில் 7 சதவீதத்திற்குச் சமமாகும். முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் போன்ற ஒரு சில இந்தியப் பெரும் தொழிலதிபர்கள், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் ஆகியோருடன் ஒரே வட்டாரத்தில் இணைந்துள்ளனர். “இந்தியாவின் நவீன முதலாளித்துவ வர்க்கத்தால் வழிநடத்தப்படும் இந்தக் கோடீஸ்வரர்களுக்கான ஆட்சி, கால னித்துவ சக்திகளால் வழிநடத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி யை விட இப்போது அதிக சமத்துவமற்றதாக உள்ளது” என்று அந்தப் பொருளாதார அறிஞர்கள் எழுது கிறார்கள். அதிர்ச்சியூட்டும் கூற்று பார்க்லேஸ் ஆராய்ச்சியின்படி, இந்தியா, 8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பெற்ற ஒரு பொருளாதாரம் என்பதையும், 2027ஆம் ஆண்டுக்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் சிலர் கணிப்பதை பார்க்கும்போது, இந்தக் கூற்று அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த வருமானம் மற்றும் செல்வத்தில் எவ்வளவு சதவீதம் நாட்டின் முதல் ஒரு சதவீதத்தினரிடம் உள்ளது என்பதைக் கண்கா ணித்து அதன் மூலம் உலக சமத்துவமின்மை ஆய்வ கத்தின் ஆய்வாளர்கள் இந்தக் முடிவுக்கு வந்துள்ள னர். வருமானம் என்பது சம்பாத்தியம், சேமிப்பு களுக்கான வட்டி, முதலீடுகள் மற்றும் பிற ஆதாரங் களின் மொத்தத்தைக் குறிக்கும் அதே வேளையில், செல்வம் (அல்லது நிகர மதிப்பு) என்பது ஒரு தனிநபர் அல்லது குழுவிற்குச் சொந்தமான சொத்துக்களின் மொத்த மதிப்பாகும். இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு களை முன்வைப்பதற்காக, ஆய்வாளர்கள் தேசிய வரு மானக் கணக்குகள், செல்வத்தின் மொத்த மதிப்பீடுகள், வரிக் கணக்கீடுகள், பணக்காரர்கள் பட்டியல்கள் மற்றும் வருமானம், நுகர்வு மற்றும் செல்வம் குறித்த ஆய்வுகள் ஆகியவற்றை ஒன்றி ணைத்துள்ளனர். 1 சதவீதத்தினரிடம் 40.1 சதவீத செல்வம் வருமானத்தைப் பொறுத்தவரை, பொருளாதார வல்லுநர்கள் 1922 முதல் பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட வரு டாந்திர வரிப் பட்டியல்களை ஆய்வு செய்தனர். இந்தி யாவில் ஏற்றத்தாழ்வு உச்சத்தில் இருந்த கால கட்டத்தில்கூட, அதாவது 1930களில் இருந்து 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை யிலான போர்களுக்கு இடைப்பட்ட காலனித்துவ கால கட்டத்தில்கூட, நாட்டின் தேசிய வருமானத்தில் சுமார் 20 முதல் 21 சதவீதம் வரை முதல் ஒரு சதவீதத்தி னரிடம் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இன்று, நாட்டின் வருமானத்தில் 22.6 சதவீதம் முதல் ஒரு சதவீதத்தினரிடம் உள்ளது. அதேபோல், இந்திய அரசாங்கம் செல்வம், கடன் மற்றும் சொத்துக்கள் குறித்த பெரிய அளவிலான வீட்டுக் கணக்கெடுப்புகளை முதன்முதலில் நடத்தத் தொடங்கிய 1961ஆம் ஆண்டு முதல், பொருளா தார வல்லுநர்கள் செல்வ ஏற்றத்தாழ்வின் போக்கு களையும் கண்காணித்து வந்தனர். இந்த ஆராய்ச்சியை ஃபோர்ப்ஸ் பில்லியனர் குறியீட்டில் இருந்து கிடைத்த தகவல்களுடன் இணைத்தபோது, இந்தியாவின் முதல் ஒரு சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் வியக்கத்தக்க வகையில் 40.1 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. பாஜக ஆட்சி வந்தது முதல் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு 1991இல் ஒருவராக இருந்த இந்தியப் பில்லியனர் களின் எண்ணிக்கை 2022இல் 162 ஆக உயர்ந்த தால், இந்தக் காலகட்டத்தில் இந்த தனிநபர்களின் மொத்த நிகரச் செல்வம், இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் ஒரு பங்காக, “1991இல் 1%-க்கும் குறைவாக இருந்ததிலிருந்து 2022இல் பிரம்மாண்ட மாக 25% ஆக அதிகரித்துள்ளது” என்று அந்த ஆய்வி னைச் சேர்ந்த அறிஞர்கள் தெரிவித்தனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி 2014இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏற்றத்தாழ்வுகளின் அதி கரிப்பு குறிப்பாகத் தீவிரமாக இருந்ததையும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. கடந்த பத்தாண்டு களில், முக்கிய அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், “முடிவெடுக்கும் அதிகாரம் மையப் படுத்தப்பட்ட ஒரு சர்வாதிகார அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்புக்கும்” வழிவகுத்துள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது. இது, சமூகம் மற்றும் அரசாங்கத்தின் மீது “அதீத செல்வாக்கைச் செலு த்த” வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 2 சதவீத மீச்சிறப்பு வரி / தேசிய வருமானத்தில் 0.5% சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து ஆகிய வற்றில் அரசாங்கம் அதிக பொது முதலீடுகளைச் செய்வது மிகவும் அவசியம் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அதுமட்டுமின்றி, 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் 167 பணக்காரக் குடும்பங் களின் நிகர சொத்து மதிப்பின் மீது வெறும் இரண்டு சதவிகித ‘மீச்சிறப்பு வரி’(‘super tax’) விதித்தால், அது தேசிய வருமானத்தில் 0.5 சதவிகித வருவாயை ஈட்டித் தரும் என்றும், அத்தகைய முதலீடுகளை எளி தாக்குவதற்கு மதிப்புமிக்க நிதி வாய்ப்பை உரு வாக்கும் என்றும் அந்த அறிக்கையை உருவாக்கிய அறிஞர்கள் வாதிட்டிருக்கின்றனர். எனினும், 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் வெளியான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கைகளின் முந்தைய பதிப்புகளில் உள்ள இந்தியா குறித்த அத்தியாயங்கள் இதே போன்ற போக்குகளைச் சுட்டிக்காட்டியிருந்தன. அவை தற்போதைய அறிக்கையில் மேலும் வலுப்பெற்றுள்ளன. ஆனால் இது வெறும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஒரு கோட்பாட்டுக் கருத்து அல்ல. மாறாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட உண்மைகளிலிருந்தே இது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. வராக்கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரி இழப்பு நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொட ரில், கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, 2014-15 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில், பெரிய தொழில்கள் மற்றும் சேவைகளுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன்களின் தொகை (NPAs) பிரம்மாண்டமான 9,26,947 கோடி ரூபாய்கள் என்று அரசாங்கம் மக்களவையில் எழுத்துப்பூர்வ மாகத் தெரிவித்துள்ளது (ஆதாரம்: ரிசர்வ் வங்கி). இதேபோல், 2019-20 மற்றும் 2023-24 ஆண்டு களுக்கு இடையில் கார்ப்பரேட் வரி காரணமாக இழ க்கப்பட்ட மொத்த வருவாய், அந்தந்த ஆண்டுகளின் வருவாய் வரவு வரவுசெலவுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், 3,67,261 கோடி ரூபாய்களாகும். மறுபுறம், புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மூலமாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒழித்துக்கட்டி இருப்பதன் மூலமாகவும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் 2012 ஏப்ரல் 4-9 தேதிகளில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டில் நாம் ஏற்றுக்கொண்ட சில தத்து வார்த்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இந்த முடிவுக்கே வந்திருந்தோம். அதில் நாம் கூறியிருந்த தாவது: “எனினும், நடப்பு நவீன தாராளமயத் தாக்குதல், அதைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத சில போக்குகளை உருவாக்கியுள்ளது. இதை நிலை நாட்டுவதற்கு, உலகமயமாக்கலின் இரண்டு முக்கிய அம்சங்களை மீண்டும் வலியுறுத்த வேண்டியது அவசியம். முதலாவதாக, இந்தச் செயல்முறை யானது, நாடுகளுக்குள் பணக்காரர்களுக்கும் ஏழை களுக்கும் இடையேயும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயும் அதிகரித்து வரும் பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் சேர்ந்து நிகழ்ந்துள்ளது. இரண்டாவதாக, உலகமயமாக்கல் ‘வேலையற்ற வளர்ச்சி’ என்ற நிகழ்வுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில், லாபத்தை உச்சப்படுத்துவதற்கான பாதை, மனித வளத் திறன்களை மேம்படுத்துவதில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அதிக முதலீடு செய்வதன் மூலம் மனித உழைப்பை அகற்றுவதை தவிர்க்க முடியா மல் மேற்கொள்கிறது.” வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டம் எனவே, இனி செல்ல வேண்டிய பாதை தெளிவாக உள்ளது. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இது உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த தேவையை வலுப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யத் தவறினோமானால், இந்தியா மிக மோசமான செல்வந்தர் ஆட்சியை நோக்கியும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய பேரழிவை நோக்கியும் செல்லும். - தமிழில்: ச.வீரமணி</p>
