திருச்சி விரைவு செய்திகள்
8 Feb 2026, 3:55 pm

குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து: தேர்வர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர், பிப்.8 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி மைப் பணிகள் (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்) கொள்குறி வகை தேர்வு ஞாயிற்றுக்கிழமை திடீ ரென ரத்து செய்யப் பட்டதால், தேர்வு அறை யிலிருந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் பாரத் அறி வியல் மற்றும் மேலாண் மைக் கல்லூரி தேர்வு மையத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை தேர்வுக்கு விண்ணப்பித்த 450 பேர் வந்தனர். தேர்வு அறைக்கு சென்றவர் களுக்கு சுமார் 45 நிமிடம் கழித்து, தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள தாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, அறை யைவிட்டு வெளியேறி னர். இதே போல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற விருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆதுரவற்ற கைம்பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை, பிப்.8 - மயிலாடுதுறை மாவட் டத்தில் சமூக நலத்துறை மூலம் ஆதரவற்ற கைம் பெண்கள், அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த் துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஞாயிறன்று தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத் தாக்க பயிற்சி நிறுவனத் தின் மூலம் பேக்கரி பொருட்கள் உற்பத்தி செய் வதற்கான பயிற்சி பெற்ற ஆதரவற்ற கைம் பெண்கள் 4 பேரின் வாழ்வாதாரத்திற்காக ரூ.35,000 மதிப்பிலான ஓவன் டோஸ்டர் கிரில் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.

உயர்த்த கோரிக்கை பாபநாசம், பிப்.8 - தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் பாபநாசம் வட்டாரக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் தில்லைவனம் பேசி னார். வங்காரம்பேட்டை கிளை, கபிஸ்தலம் கிளை, பாப நாசம் நகர கிளை, ராஜேந்திரன் புறநகர் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் பிப்.12 அன்று நடக்கிற மறியல் போராட் டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது, ஓய்வூதியத்தை ரூ.2000 ஆக உயர்த்தவும், வீட்டு வசதி திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவும் பிப்.13 அன்று முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. சிறுமியை வன்புணர்வு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை தேனி, பிப்.8- சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் காணிக்கை ராஜ் (66) என்ற முதியவர்.இவர் 2022 ஆம் ஆண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பத்து வயது சிறுமியை அழைத் துச் சென்று வன்புணர்வில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற் றோர் பெரியகுளம் தெற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்று முதியவர் காணிக்கை ராஜ் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற் காக முதியவருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பளித் தார். மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற் காக தமிழக அரசு 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளார். இயற்கை விவசாயத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை மையம் சிவகங்கை, பிப்.8- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில், வைகை ஆற்றங்கரையோரம் குலாலர் தெருவில் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் மையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் முழுமையாக இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை என, கடையின் உரிமையாளர் பொன்னையா தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயப் பொருட்களை விரும்பும் பொதுமக்கள் மற்றும் ஆரோக்கிய உணவு தேடும் நுகர்வோரிடையே இந்த விற்பனை மையம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பள்ளியில் ரூ.76 ஆயிரம் திருட்டு திருவில்லிபுத்தூர், பிப்.8- திருவில்லிபுத்தூரிலிருந்து மல்லி செல்லும் சாலையில் தைலா குளம் அருகே அமைந்துள்ள அரிமா இண்டர் நேஷனல் பள்ளியில், பிப்.4-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி பணிகள் முடிந்த பின்னர், பணியாளர் தங்கமணி அலுவலக அறை மற்றும் ரெக்கார்டு அறையை பூட்டி, சாவியை காவலர் குருநாதனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் பிப்.5 ஆம் தேதி காலை, பள்ளியின் கணக்காளர் செல்வலட்சுமி அலுவலக அறையின் கதவை திறக்க வந்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டுள்ளார். தொடர்ந்து அறைக்குள் சென்று பார்வையிட்ட போது, கட்டுமான பணிகளுக்காக வைக்கப் பட்டிருந்த ரூ.20,000 மற்றும் ரெக்கார்டு அறையில் வைத்தி ருந்த ரூ.56,000 என மொத்தம் ரூ.76,000 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரி விக்கப்பட்ட நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில் பள்ளி முதல்வர் சிவக்குமார், பள்ளியின் சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கொண்டு, பள்ளி முதல்வர் சிவக் குமார் மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மல்லி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இராஜபாளையம், பிப்.8- இராஜபாளையம் வட்டம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று, வட்டார சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இராஜபாளையம் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் சத்துணவு தொடர்பான கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. இக்கண்காட்சியை முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வ முடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் சத்துமாவில் தயாரிக்கப்பட்ட கொழுக் கட்டை அனைவரையும் கவர்ந்தது. மேலும், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் குறித்த விளக்கங்களும், அவை உடல்நலத்திற்கு தரும் நன்மைகள் பற்றிய தகவல்களும் பொதுமக்களுக்கு பணியாளர்களால் எடுத்துரைக்கப்பட்டது.