செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடக்கம்</strong></p>
<p>விழுப்புரம், டிச.10- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டு றவு சர்க்கரை ஆலைகளில் இந்த ஆண்டுக்கான அறவையை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலயில் உள்ள செங்கல்ராயன் கூட்டு றவு சர்க்கரை ஆலையில் நடைபெற்றது, 2025-2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி யினை மாவட்ட ஆட்சி யர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலை யில் புதனன்று (டிச.10) தொடங்கி வைத்தார் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட வருவாய் அலு வலர், செயலாட்சியர் இரா.முத்துமீனாட்சி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கு.ஓம் சிவசக்தி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
