தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிரீன்லாந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான ரத்த வரலாறும்!…

10 Jan 2026, 2:48 pm
கிரீன்லாந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான ரத்த வரலாறும்!…
<p><strong>கிரீன்லாந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான ரத்த வரலாறும்</strong></p> <p>வெனிசுலா மீதான தாக்கு தலைத் தொடர்ந்து டென் மார்க் தேசத்தின் ஒரு பகுதியான கிரீன்லாந்து எனப்படும் நிலப்பகுதியையும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்திய நிர்வாகம் கேட்கி றது. சுமார் 70,000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவு. அது டென்மார்க் அரசியல மைப்புச் சட்டத்துக்குட்பட்ட சுயாட்சி பகுதி. &nbsp;சீனா, ரஷ்யாவின் செல்வாக்கைத் தடுக்கவும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் கிரீன்லாந்து தனக்குத் தேவை என ஜனாதிபதி டிரம்ப் மூர்க்கத்தனமாக வற்புறுத்துகிறார். டென் மார்க் அரசாங்கம் வலுவான எதிர்ப்புக் குரலை எழுப்பியிருந்தாலும், கிரீன்லாந்து பகுதியில் தனக்குச் சாதகமான சில குரல்களை உருவாக்குவதில் அமெரிக்க நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் &nbsp;நில விரிவாக்க வரலாறு தனது வரலாற்றில் அமெரிக்கா சாம, &nbsp;தான, பேத, தண்ட முறைகளைப் பயன்படுத்தித் தன்னை விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது என்பதைப் பின்வரும் விவரங்கள் தெளிவாக்கு கின்றன: 1783-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பொழுது 13 மாகாணங்கள் மட்டுமே அமெரிக்காவின் பகுதியாக இருந்தன. 1803-ஆம் ஆண்டு லூசியானா பகுதியை பிரான்சிடமிருந்து அமெரிக்கா 1.5 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அமெ ரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சனுக்கும் பிரான்சின் நெப்போலியனுக்கும் இடையே உருவான ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா 13 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவைப் பெற்றது. இன் றைய அமெரிக்காவின் பரப்பளவில் இது 23.3% ஆகும். இது இன்றைய அமெரிக்காவின் 15 மாகாணங்களை உள்ளடக்கிய பகுதியாகும். 1819-ஆம் ஆண்டு ஸ்பெயின் ஃபுளோரிடா வை அமெரிக்காவுக்குத் தர நிர்பந்திக்கப் பட்டது. அமெரிக்கா தந்த விலை 50 லட்சம் அமெரிக்க டாலர்கள். 1836-ஆம் ஆண்டு டெக்ஸாஸ் பகுதி மெக்சிகோவிடமிருந்து பிரிந்தது. பல சூழ்ச்சிகளை உருவாக்கி அமெரிக்கா 1845-ஆம் ஆண்டு டெக்ஸாஸைத் தனது தேசத்தின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. போர்களும் ஆக்கிரமிப்புகளும் பின்னர் அமெரிக்காவுக்கும் மெக்சிகோ வுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நடந்தது. மெக்சிகோவைத் தோற்கடித்த அமெ ரிக்கா இன்றைய கலிபோர்னியா, நிவேடா, உட்டா, அரிசோனா, கொலராடோ, நியூ மெக்சிகோ ஆகிய பகுதிகளை இணைத்துக் கொண்டது. இதற்கு 1.5 கோடி டாலர்களை மெக்சிகோவுக்கு அமெரிக்கா தந்தது. 1846-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து ஒரே கான் பகுதியைப் பெற்றது. 1867-ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜார் மன்னனிடமிருந்து அலாஸ்கா பகுதியை 72 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்கா வாங்கியது. இது ஜார் மன்னன் செய்த மிகப் பெரிய தவறு என விமர்சிக்கப்பட்டது. ஏனெ னில் பின்னர் அலாஸ்காவில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவுகளும் தற்கால நெருக்கடிகளும் 1917-ஆம் ஆண்டு டென்மார்க்கிடமிருந்து விர்ஜின் தீவுகளை 2.5 கோடி டாலர்களுக்கு அமெரிக்கா வாங்கியது. 1898-ஆம் ஆண்டு ஸ்பெயினுடன் போரிட்டு போர்ட்டோ ரிக்கோ வைக் கைப்பற்றியது. அதே ஆண்டு ஹவாய் தீவுகளையும் பறித்துக்கொண்டது. 1946-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் கிரீன்லாந்து தீவுகளை வாங்க 10 கோடி டாலர்களை டென்மார்க்குக்குத் தர முன்வந்தார். ஆனால் டென்மார்க் அதனை நிராகரித்துவிட்டது. அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பொழுது அதன் பரப்பளவு சுமார் 9 லட்சம் சதுர மைல்கள். இன்றைய பரப்பளவு 36 லட்சம் சதுர மைல்கள். சுமார் 4 மடங்கு நிலப்பரப்பைப் போர்கள், சூழ்ச்சிகள், உள்ளூர் மக்களைக் கொல்லுதல், பணத்தா சை உருவாக்குதல் எனப் பல வழிகளில் அமெ ரிக்கா கைப்பற்றியுள்ளது. லட்சக்கணக்கான உள்ளூர் மக்களின் ரத்தக்கறையுடன்தான் இன்றைய அமெரிக்கா எனும் தேசம் உருவா கியுள்ளது. பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பொழுது 13 மாகாணங்களே இருந்தன; இன்று 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 37 மாகாணங்கள் பின்னர் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டவை. இதன் தொடர்ச்சியாகவே கிரீன்லாந்தை டிரம்ப் கேட்கிறார். 1970-களுக்குப் பின்னர் நிதி மூலதன காலத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே முரண்பாடுகள் பெருமளவு மட்டுப் பட்டன. எனினும் கிரீன்லாந்து பிரச்சனையில் இந்த முரண்பாடு மீண்டும் தலையெடுக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அது நீடிக்கும் எனும் உத்தரவாதம் இல்லை. கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேட்டோவின் சமாதிக்கு வழிவகுக்கும் என டென்மார்க் எச்சரித்துள்ளது. இறுதிவரை டென்மார்க் உறுதியாக நிற்குமா? ஐரோப்பிய ஒன்றியம் முதுகெலும்பை வலுவாக்கிக் கொண்டு டென்மார்க்குக்கு ஆதரவாக அமெ ரிக்காவை எதிர்க்க முன்வருமா? கிரீன்லாந்து அரசியல்வாதிகள் டென்மார்க் அரசாங்கத்தை ஓரம் கட்டிவிட்டு பணத்தாசைக்காக டிரம்பு டன் ஒப்பந்தம் போடுவார்களா? இந்த கேள்வி களுக்கு அடுத்த சில வாரங்களில் பதில் தெரிந்துவிடும். அ.அன்வர் உசேன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.