தீக்கதிர் உலக செய்திகள்
26 Sept 2026, 10:47 pm

தீக்கதிர் உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் வேட்பாளர் தகுதி நீக்கம்: இஸ்ரேலுக்கு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஏதென்ஸ்,செப்.26-இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரபு அரசியல் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் போட்டியிட அந்நாட்டு நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. இதனை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், அடக்குமுறைகளைச் சந்தித்து வரும் இஸ்ரேல் கம்யூனிஸ்டுகளுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 23 அன்று இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அனைத்து அரபு கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் பல முக்கிய வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்ய வாக்களித்தது. அதில், இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் (Maki) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போதைய நாடாளுமன்ற (Knesset) உறுப்பினருமான யூத இனத்தைச் சேர்ந்த ஓஃபர் காசிஃப் (Ofer Cassif) என்பவரும் அடங்குவார். (அரபு அரசியல் கூட்டணி என்பது இஸ்ரேலில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் அரபு மக்களின் உரிமைகளுக்காகவும் பிரதிநிதித்துவத்திற்காகவும் அங்குள்ள பல்வேறு அரபு அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டணியாகும்)

இந்த நடவடிக்கையானது கம்யூனிஸ்ட் தலைமையிலான ‘ஹடாஷ்’ (Hadash) கூட்டணிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகுதிநீக்கம் இறுதியானது அல்ல என்றும், இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரபு அரசியல் கூட்டணிகள் மற்றும் தோழர் ஓஃபர் காசிஃப் உள்ளிட்ட வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிட விடாமல் தகுதிநீக்கம் செய்த இஸ்ரேல் தேர்தல் குழுவின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான முகத்தை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. மேற்காசியாவை தனது விருப்பப்படி ‘மறுவடிவமைக்க’த் துடிக்கும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன மற்றும் லெபனான் மக்களை இரக்கமின்றி கொடூரமாகக் கொன்று குவிப்பதோடு, தன் நாட்டின் எல்லைக்குள்ளேயே ஜனநாயக உரிமைகளையும் நசுக்கி வருகிறது.

இஸ்ரேலைத் தனது கூட்டாளியாகவும், மேற்காசியாவில் உள்ள ‘ஒரே ஜனநாயக நாடு’ என்றும் இத்தனை காலம் புகழ்ந்து வந்த கிரீஸ் ஆட்சியில் உள்ள ‘புதிய ஜனநாயக’ அரசும், பிற எதிர்க்கட்சிகளும் இப்போது மக்களின் முன்பாக அம்பலப்பட்டு நிற்கின்றன. இஸ்ரேல் கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கும் எங்கள் ஆதரவு என்றும் உண்டு. இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் பொதுச் சொத்து : சீனா பிரகடனம்

நியூயார்க், செப்.26-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து என்று சீனா பிரகடனம் செய்துள்ளது. ஐ.நா அவைவிவாதத்தில் உரையாற்றிய சீனாவின்நிரந்தரப் பிரதிநிதி ஃபூ காங் தொழில்நுட்பத் துறையில் ஏகபோகமாக உரிமைகளை கைப்பற்றி, ‘தொழில்நுட்ப ஆதிக்கத்தை’ நிலைநிறுத்த முயலும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்தநாடுகளை பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, சில முக்கிய நாடுகள் தொழில்நுட்பத்தில் தங்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. இது சர்வதேச அளவில் குறிப்பாகச் வளர்ந்துவரும் சிறிய நாடுகளின் முன்னேற்றத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. அதுமட்டுமின்றி, உலகளாவிய அளவில்தொழில்நுட்பத் தரநிலைகள் சீர்குலைவதற்கும், தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையே இணக்கமின்மை ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். இது உலகப் பாதுகாப்பிற்கே பேராபத்தாக முடியும்.எனவே உலக நாடுகள் அனைத்தும்தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரித்து, திறந்தவெளி தொழில்நுட்ப அமைப்புகளை (Open-source ecosystems) ஊக்குவிக்க வேண்டும். உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றவேண்டும்.

அதேவேளையில், உலகின் முன்னணி பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பொய்ச்செய்திகள் மற்றும்வெறுப்புப் பேச்சுகள் பரவுவதைத்தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, சட்டப்பூர்வமான ஒழுங்குமுறைகளுக்கும் பொதுமக்களின் கண்காணிப்பிற்கும் அந்நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தனிநபர் வருமானம் :நம்பிக்கை இழக்கும் அமெரிக்கர்கள்

பணவீக்கம் தீவிரமடைந்ததால் அமெரிக்க மக்களுக்கு எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரிக்கிறது. தனிநபர் வருமானம்மீது மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது என மிச்சிகன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு ஆகஸ்ட் மாதம் 15 சதவீதம் குறைந்துள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 4புள்ளிகள் குறைவாகும். அதேபோல தனிநபர் வருமானம் வரும் ஆண்டில் அதிகரிக்கும் என்பதில் மக்களுக்குநம்பிக்கை இல்லை.பெரும்பாலான மக்கள் விலை வாசி உயர்வால் கவலையடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

‘போர் பதற்றத்தை அதிகரித்தால் உக்ரைன் நிலைமை மோசமாகும்’

போர் பதற்றத்தை அதிகரிப்பதன் காரணமாக உக்ரைன் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காது.அது உக்ரைனின் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். போரைதூண்டி விடும் எந்தவொரு நடவடிக்கையும் அல்லது பதற்றத்தை அதிகரிப்பதும் அந்நாடு எதிர்பார்க்கும் முடிவைத்தராது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கானநிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்றும் கூறினார்.