தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆள் அரவமற்ற மர்ம வளாகமாய் தொல்லியல் ஆய்வு நிறுவனம்!? - அ.விஜயகுமார்

9 May 2026, 2:07 pm
ஆள் அரவமற்ற மர்ம வளாகமாய் தொல்லியல் ஆய்வு நிறுவனம்!? -  அ.விஜயகுமார்

ஆள் அரவமற்ற மர்ம வளாகமாய் தொல்லியல் ஆய்வு நிறுவனம்!? - அ.விஜயகுமார்

தலைநகர் தில்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம், தொல்லியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு முதன்மையான மையமாக ஏற்படுத்தப்பட்டது. 25 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த வளாகம், 289 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த மையம் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கான நோக்கம் நிறை வேறவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தொல்லியல் துறை படிப்படியாக சிதைக்கப்படுகிறது அல்லது அவர்களது சித்தாந்தத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. வரலாற்று ரீதியாக நடைபெறும் ஆய்வுகளில் தனது நோக்கங்களை நுழைக்கிறது.

ஆள் அரவமற்ற ஆய்வு வளாகம்

இந்நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவன வளாகம் ஒரு மர்ம வளாகமாக காட்சியளிக்கிறது. 25 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வளாகத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. வழக்கமாக கல்வி நிறுவன வளாகம் என்றால் பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்த வளாகமே அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக முற்றிலும் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கே மனித நடமாட்டமில்லை. ஒரு விலங்குகளோ அல்லது அந்த இடத்திற்கு உயிர் கொடுக்கக்கூடிய பசுமையான மரங்களோ கண்ணில் படவில்லை. 2019-இல் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட இந்த வளாகம், இந்தியாவின் ஒரு சிறந்த தொல்லியல் நிறுவனமாக மாறும் நோக்கில் தொடங்கப்பட்டது.

2016 அக்டோபர் 28இல் இந்த நிறுவனத்திற்கு அப்போதைய ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார். தீனதயாள் உபாத்யாயாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு இந்த விழா நடைபெற்றது. நுழைவாயிலில், நிறுவனத்தின் பெயர் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், ‘Upadhyaya’ என்பதில் ‘U’ எழுத்தும், ‘Institute’ என்பதில் ‘I’ மற்றும் ‘E’ எழுத்துக்களும் காணவில்லை.

சுமார் 300 கோடி ரூபாய் செலவிடப்பட்ட இந்த 25 ஏக்கர் வளாகத்தில், நிரந்தர ஆசிரியர்கள் எவருமில்லை. மொத்தமே 15 மாணவர்கள் மட்டுமே உள்ளனர் (10 மாணவிகள், 5 மாணவர்கள்). இந்த நிறுவனம் அதிநவீன வசதிகளுடன் 3 நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய ‘ பசுமைக் கட்டடத்தில் இயங்குகிறது. இதில் 1,000 பேர் அமரக்கூடிய அரங்கம், திறந்தவெளி திரையரங்கம் மற்றும் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் நுழைவு

இந்த வளாகத்திற்கு சமீபத்தில் வட இந்தியாவை சேர்ந்த முன்னணி ஊடக நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் சென்றபோது பாதுகாப்பு காவலர்கள் அவரை முதலில் உள்ளே விடவில்லை. “மேடம், உள்ளே இருப்பவர்களிடம் யாரையாவது பேசச் சொல்லுங்கள்” என்றனர். அவர் தனது செல்பேசியில் அலுவலக அதிகாரிகளை பலமுறை அழைத்தார். ஆனால் முன் எப்போதும் போலவே அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. சுமார் 10-15 நிமிடங்கள் வாயிலில் விவாதங்களுக்குப் பிறகு, ஒரு பாதுகாப்பு காவலரின் துணையுடன் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அகலமான உட்புறச் சாலைகள், பல உயரமான கட்டடங்கள், அழகான சுவர்கள் என 25 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்தது. ஆனால், எதைக் காண வேண்டுமோ அது அங்கே இல்லை: ஒரு மனிதர் கூட இல்லை. மாணவர்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை. நிர்வாக நடமாட்டமோ, கார்களோ, இருசக்கர வாகனங்களோ இல்லை. ஒரு நாய் கூட இல்லை. வெறும் கட்டடங்கள் மட்டும் தனிமையை துணையாய்க் கொண்டிருந்தார்.

இயக்கமற்ற வளாகத்தில் ஒரு நடைபயணம்

முதன்மைக் கட்டடம் பிரதான வாயிலிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்து செல்லும் தொலைவில் இருந்தது., “இங்கு எத்தனை அறைகள் உள்ளன?” என்று அந்த செய்தியாளர் காவலரிடம் கேட்டதற்கு அவர், நிறைய அறைகள் உள்ளன, சரியாகத் தெரியவில்லை, இது மிகப்பெரிய வளாகம் அல்லவா?” என்று சொல்லியிருக்கிறார். அங்கே யாருக்குமே இந்த கட்டடத்தை பற்றி முழுமையாக தெரிந்திருக்கவில்லை.

முதன்மை கட்டடத்தின் முன்னால் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. அரசின் தகவல்படி, 1985-இல் இந்த நிறுவனம் டெல்லியின் திலக் மார்க்கில் உள்ள ஒரு பழைய கட்டடத்தில் இயங்கியது, பிறகு செங்கோட்டைக்கு மாற்றப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக, 4.77 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கப்பட்டு கிரேட்டர் நொய்டாவில் இந்தத் தனி வளாகம் உருவாக்கப்பட்டது.

இந்தக் கட்டடம் நான்கு மாடிகளைக் கொண்டது. காவலர் கூறியபடி, நான்காவது மாடியில் அலுவலகங்கள், மூன்றாவது மாடியில் வகுப்பறைகள், முதல் மற்றும் இரண்டாம் மாடிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் மாடிகள் பெரும்பாலும் பூட்டியே இருக்கும் என்கிறார் அவர். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.

பல மின்தூக்கிகள் இருந்தும் ஒன்று மட்டுமே இயங்கியது. பிரம்மாண்டமான கட்டடத்தின் நுழைவாயிலில் எந்தவித வரவேற்பு அறையும் இல்லை. யாரும் இல்லாத ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருந்தது. கட்டடத்தின் கட்டடக்கலை கவரும் வகையில் இருக்கிறது. அது நவீன கண்ணாடி கட்டடம் இல்லை, மாறாகத் பாரம்பரிய கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தது.

தொல்லியல் துறையின் கல்விப் பிரிவாகச் செயல்படும் இந்த நிறுவனம், மாணவர்களுக்குத் ஒரு சிறந்த சூழலை வழங்கும் என்று கூறப்பட்டாலும், உள்ளே ஒரு மனிதரைக் கூட காண முடியவில்லை. நான்காவது மாடியில் ஒரே ஒரு பாதுகாப்பு காவலர் மட்டும் தனது அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் இங்குமூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரிடமும் எத்தனை அறைகள் உள்ளன என்று கேட்டபோது தெரிய வில்லை.

வெறிச்சோடிய தாழ்வாரங்கள் பூட்டிய அறைகள் மற்றும் தூசு

உள்ளே நுழைய நுழைய யாராவது இருக்கிறீர்களா என்ற கேட்க வேண்டியுள்ளது. மூலையில் ஒரு உடைந்த மேசை, இரண்டு தூசு படிந்த நாற்காலிகள். நான்காவது மாடியில் பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டிருந்தன. தாழ்வாரங்கள் அமைதியாகவும், தூசு படிந்தும் கிடந்தன. கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை. ஊழியர்கள் நடமாட்டமோ, கல்விச் செயல்பாடுகளோ கண்ணில் படவில்லை. அந்த செய்தியாளரின் 20 நிமிட காத்திருப்புக்கு பிறகு ஒரு அதிகாரி கண்ணில் பட்டார்.

‘நிரந்தர ஆசிரியர்கள் இல்லை’

“ஏன் இங்கு ஆசிரியர்கள் இல்லை?” என்ற கேள்விக்கு அந்த அதிகாரி “நிறுவனம் திறக்கப்பட்டதிலிருந்தே இங்கு ஆசிரியர்கள் கிடையாது, அது இந்த நிறுவனத்தின் கோட்பாட்டிலேயே இல்லை” என்றார். இது ஒரு வழக்கமான கல்வி நிறுவனம் போலல்லாமல், வெவ்வேறு தொல்லியல் பிரிவுகளில் வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்டது என்றார். வகுப்பறை கல்வியை விடக் களப்பயிற்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார். “பாடத்திட்டம் என்ன?” என்று கேட்டபோது, “நிலையான பாடத்திட்டம் கிடையாது, அனைத்தும் நடைமுறை அனுபவம் சார்ந்தது” என்றார். மாணவர்கள் 60 நாட்கள் வரை களப்பயிற்சிக்குச் செல்வார்கள் என்றார். முறையான பாடத்திட்டம் இல்லாமல் பட்டங்கள் வழங்கப்படுவது எப்படி என்ற கேள்விக்கு அவரிடம் முறையான பதில் இல்லை.

இந்தியா முழுவதும்மே வெறும் 15 மாணவர்கள்

மாணவர் எண்ணிக்கை பற்றி கேட்டபோது, “அனைத்து இடங்களிலிருந்தும் சேர்த்து 15 பேர் மட்டுமே, இதைத் தற்போதைக்கு அதிகரிக்க முடியாது” என்றார். 25 ஏக்கர் பரப்பளவிற்கு 15 மாணவர்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இயக்குநரை சந்திக்கலாமா எனக் கேட்டால் அனுமதி மறுக்கப்பட்டது. தில்லி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டனர்.

பதில் கிடைக்காத கேள்விகள் இந்த வளாகத்தின் பின்பகுதியில் மாணவர் விடுதி அழகாக கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்களிடம் மாணவர் எண்ணிக்கை பற்றி கேட்டபோது, “எங்களுக்குத் தெரியாது. உள்ளே போய்க் கேளுங்கள்” என்றனர். உள்ளே சென்றபோது அந்த இடம் பல நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாதது போலத் தெரிந்தது. ஒரு பெண் காவலரிடம் கேட்டபோது, அவர் தயக்கத்துடன் “10 மாணவிகள் உள்ளனர் என்றார். எத்தனை அறைகள் உள்ளன என்று கேட்டதற்கு, “எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றார். மாணவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டபோது, “மேலிடத்து உத்தரவு” எனக் கூறி மறுத்துவிட்டனர்.

வெளியேற்றம்

ஒரு மாணவரையும் அங்கு பார்க்க முடியவில்லை. ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு வெறிச்சோடி கிடக்கிறது? அதன் இருப்பே கண்ணுக்குத் தெரியாத வகையில் ஒரு நிறுவனம் எப்படி இயங்க முடியும்? இந்தியாவின் தொன்மை, வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, வருங்காலத் தொல்லியல் ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நோக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எந்தவொரு கல்வி நிறுவனமும் அந்தத் துறையில் சாதித்த முன்னோடிகளின் பெயரால் அழைக்கப்படுவதே மரபு. ஆனால், தொல்லியல் துறைக்கு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு அரசியல் தலைவரின் (தீனதயாள் உபாத்யாயா) பெயரைச் சூட்டியது, இந்த நிறுவனம் ஒரு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகச் செயல்படுவதை விட, ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தைப் பரப்பும் இடமாக மாற்றப்படுகிறதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. தொல்லியல் என்பது தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டிய அறிவியல் பூர்வமான துறை. ஆனால், ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்திற்குள் சுருக்க முயல்வதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அறிவியலுக்குப் புறம்பான தேடல்கள்

சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழங்கால நாகரிகங்களை ஒரு குறிப்பிட்ட மதச் சாயத்துடன் முன்னிறுத்தத் தேவையான “ஆதாரங்களை” தேடுவதிலேயே ஒன்றிய பாஜக அரசு அதிக கவனம் செலுத்துகிறது. தமிழகத்தின் கீழடி போன்ற அறிவியல் ரீதியான கண்டு பிடிப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, புராணக் கதைகளுக்கும் தொல்பொருளுக்கும் முடிச்சுப் போடும் முயற்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு சர்வதேச தரத்திலான தொல்லியல் நிறுவனமாக இருக்க வேண்டிய இந்த வளாகம், தற்போது வெறும் சம்பிரதாயமான இடமாகவே இருக்கிறது.

அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை விட, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்படுவதால் மாணவர்களின் ஆய்வுத் தரம் பாதிக்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை விட, ஏற்கனவே உள்ள வரலாற்றை மாற்றியமைக்கும் பணிகளுக்கே இந்த வளாகம் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பழங்காலக் கோயில்களும், நினைவுச்சின்னங்களும் முறையான பராமரிப்பின்றிச் சிதைந்து வருகின்றன. அந்த இடங்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்யாமல், இத்தகைய பிரம்மாண்ட வளாகங்களைக் கட்டி அதையும் முழுமையாக பயன்படுத்தாமல் வெறும் காட்சிககூடமாக மாற்றியுள்ளது ஒன்றிய அரசு.

தொல்லியல் என்பது மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகுக்குச் சொல்லும் காலக் கண்ணாடி. அந்தக் கண்ணாடியில் அரசியல் வர்ணம் பூசப்பட்டால், நாம் காண்பது பிம்பமாக இருக்குமே தவிர உண்மையாக இருக்காது. பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் போன்ற நிறுவனங்கள், அரசியல் நோக்கங்ளுக்காகப் பயன்படுத்தப்படாமல், இந்தியாவின் உண்மையான பன்முக வரலாற்றைக் காக்கும் இடமாக மாற வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாகும்.வெளியேற்றம்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.