நிக்கோபார் பெருந்திட்டமும் விதிமீறல்களும்
10 May 2026, 11:13 pm

நிக்கோபார் பெருந்திட்டமும் விதிமீறல்களும்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் ஒன்றிய அரசு செயல்படுத்தத் துடிக்கும் 92,000 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கிரேட் நிக்கோபார்’ உள்கட்டமைப்புத் திட்டம், தொடக்கத்திலி ருந்தே ஜனநாயக விழுமியங்களையும் பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் காலில் போட்டு மிதிப்ப தாகவே உள்ளது. இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் நிலவிய அப்பட்டமான விதி மீறல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வன உரிமைகள் சட்டத்தின் (FRA) படி, இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் பெற கிராம சபை களில் 50 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்பது கட்டாயமாகும். ஆனால், நிக்கோபார் நிர்வாகம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, ஒரு கூட்டத்தில் கூட இந்த 50 சதவீத வருகை உறுதி செய்யப்படவில்லை.

நிர்வாகம் சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி, கேம்ப்பெல் பே (1.83%), லட்சுமி நகர் (14.72%) மற்றும் கோவிந்த் நகர் (11.98%) ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டங்களில் மிகக் குறைந்த அளவிலான மக்களே பங்கேற்றுள்ள னர். மொத்தமுள்ள ஏழு கிராமங்களின் மக்கள் தொகையான 7,519 பேரில் வெறும் 349 பேர் (4.6%) மட்டுமே கலந்துகொண்ட கூட்டங் களை வைத்து, “ஒட்டுமொத்த ஒப்புதல்” கிடைத்துவிட்டதாக நிர்வாகம் வாதிடுவது சட்டத்தின் நோக்கத்தையே கேலிக்கூத்தாக்கு கிறது. குறிப்பாக, இக்கூட்டங்களுக்கு ஒரு நாள் முன்னதாக மட்டுமே அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இது திட்டமிட்டே பெரும் பான்மையான மக்களை இக்கூட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தும் அதிகார வர்க்கத் தின் சதியாகும். பழங்குடியின மக்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கும் இவ்வளவு பெரிய திட்டத்திற்கு ஒரு நாள் கால அவகாசத்தில் எப்படி முறையான விவாதங்களை நடத்தமுடியும்?

நிக்கோபார் மற்றும் ஷோம்பென் பழங்குடி யின சமூகங்கள் கிராம சபைக் கட்டமைப் பிற்குள் வராத நிலையில், அவர்களின் முறையான பிரதிநிதித்துவ அமைப்பான பழங்குடியினர் கவுன்சிலிடம் கலந்தாலோசித்து ஒப்புதல் பெறப்படாதது சட்டவிரோதமானது. மேலும், ஒரே நபரின் பெயர்கள் பல கூட்டங் களின் வருகைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மற்றும் ஒரே பட்டியலில் ஒரே பெயர் மீண்டும் மீண்டும் வருவது போன்ற மோசடிகள், இந்தத் திட்டம் எவ்வளவு அவசரகதியாகவும் முறைகேடாகவும் திணிக்கப்படுகிறது என்பதற்கு சான்றாகும்.

பல்லுயிர் பெருக்கம் மிக்க இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகப் பழங்குடியினரின் நிலத்தையும் உரிமையையும் பறிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது. பழங்குடியினரின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்தத் திட்டத்தை ஜனநாயக - முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.