கிராபைட் சுரங்கத் திட்டம் சிவகங்கையில் பல ஆயிரம் விவசாயிகள் முற்றுகை!
27 Jan 2026, 3:28 pm
<p><strong>கிராபைட் சுரங்கத் திட்டம் சிவகங்கையில் பல ஆயிரம் விவசாயிகள் முற்றுகை!</strong></p>
<p>சிவகங்கை, ஜன.27 - அரசனூர், இலுப்பைக்குடி உள்ளிட்ட 5 கிராமங்களில் 1,565 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தித் தனியார் நிறு வனம் கிராபைட் சுரங்கம் அமைக்க முயல்வதைக் கண்டித்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாயன்று மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் சாமி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில், எம்.எல்.ஏ பி.ஆர். செந்தில்நாதன், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், துணைத் தலைவர் முத்து ராமு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாழ்வாதாரப் பாதிப்பு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் பாதிக்கப்பட்டு நீராதா ரம் முழுமையாக அழியும் எனப் போராட்டக் குழுவினர் எச்ச ரித்தனர். முன்னறிவிப்பின்றி நிலம் கையகப்படுத்தும் முயற் சியை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்சியர் உறுதி போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மக்களின் எதிர்ப்பு குறித்து அரசுக்குக் கடிதம் அனுப்பப்படும் என்றும், திட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இலுப்பைக்குடியில் டிச.30 முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை அமைந்தது.</p>
