திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமோக வரவேற்பு
10 Apr 2026, 5:30 am

திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமோக வரவேற்பு

சிவகங்கை, ஏப்.9- சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திரளான மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம், தர்மப்பட்டி, தோணிப்பட்டி, கே.புதுப்பட்டி, பிரான்பட்டி, எஸ்.புதூர்ப்பட்டி, கணபதிப்பட்டி, கரியாம்பட்டி, வேலூர், தேனிப்பட்டி, கள்ளம்பட்டி, கொண்டாணியம், குன்னத்தூர், இடையப்பட்டி, அய்யாபட்டி, கரிசல்பட்டி, காலனி, சிந்தம்பட்டி, அக்ரகாரம், மணப்பட்டி, கரிசல்பட்டி, அண்ணாநகர், சேர்வைக்காரன்பட்டி, புழுதிப்பட்டி, தேத்தாம்பட்டி, வாராபட்டி, பள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, இராணிப்பட்டி, மினாட்சியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது, திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்பு அளித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன், தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.