முந்தய பக்கம்

எளிமைக்கு எழுத்து வலிமைக்கு இலக்கணம்!

23 Feb 2026, 5:35 pm
எளிமைக்கு எழுத்து வலிமைக்கு  இலக்கணம்!
<p><strong>எளிமைக்கு எழுத்து வலிமைக்கு &nbsp;இலக்கணம்!</strong></p> <p>&lsquo;ஏறினால் ரெயில் இறங்கினால் &nbsp;ஜெயில்&rsquo; என்ற சொற்றொட ருக்குச் சொந்தக்காரர் தோழர் ஐ.மா.பா. பாரதியின் மேலிருந்த பற்றால் &nbsp;மாயாண்டி, ஐ.மாயாண்டி பாரதியானார். பள்ளிப் பருவத்திலேயே கள்ளுக்கடை மறிலில் ஈடுபட்டார். விடு தலைப் போரில் முனைமுகத்து நின்றார். எழுத்தாற்றல் மிக்க ஐ.மா.பா, வின் வீரதீர எழுத்துக்குச் சாட்சி &lsquo;படு களத்தில் பாரத தேவி&rsquo;, &lsquo;தூக்குமேடை தியாகி பாலு&rsquo; போன்ற நூல்கள். நெல்லைச் சதி வழக்கு உள்பட ஏராளமான வழக்கு களில் கைதாகி சிறைப் பறவையாய் &nbsp;வாழ்ந்தார்.லோகோபகாரி, லோக சக்தி, ஜனசக்தி, தீக்கதிர் என &nbsp;அவரது பத்திரிகையாளர் பணி அரை நூற்றாண்டுக்கு மேல். எழுத்தில் எளிமை, வெகுமக்கள் விரும்பும் ஜனரஞ்சக நடை, கருத்தில் செழுமை, செங்கொடியின் சிந்தனை என புகழ்க் கொடி நாட்டினார். ரஷ்ய பத்திரிகை &nbsp;&lsquo;பிராவ்தா&rsquo; அழைப்பின் பேரில் சோவியத் சென்று வந்து, &nbsp;&lsquo;மண்ணில் சொர்க்கம் கண்டேன்&rsquo; என கட்டுரை வடித்தார். காந்தியை கொன்றவன் ஒரு இந்து மதவெறியன் என்று பிரச்சாரம் செய்து மதுரையில் கலவரம் நிகழாமல் தடுத்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டு இறுதிவரை செயல்பட்டவர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்காகப் பாடுபட்டவர். சின்னஞ் சிறார்களுக்கு மிட்டாய்த் தாத்தாவாய்த் திகழ்ந்தவர். எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டு மின்றி சிறந்த பேச்சாளராகவும் மிளிர்ந்தவர். &nbsp;இன்றைய இளம் தலைமுறைக்கு என்றென்றும் எடுத்துக் காட்டாய் விளங்குபவர் ஐ.மா.பா!</p>
Share
FacebookXWhatsAppTelegram