அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
14 Feb 2026, 4:33 pm
<p><strong>அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், பிப்.14- மதுரை காமராசர் பல்க லைக் கழகம் இணைவு பெற்ற திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 2022–2025 கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவியர்களுக் கான மூன்றாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருவில்லிபுத் தூர் சிறப்பு நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி ஜி.சுதாகர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஆங்கிலம், தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் கணித வியல் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 201 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுப. சரவணன் வர வேற்புரை ஆற்றினார். அனைத்து துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள் மற் றும் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர் களை வாழ்த்தினர்.</p>
